இந்த வாட்டி மிஸ்ஸே ஆகாது.. தவெகவுக்கு எதிராக பக்கா ஸ்கெட்ச்.. ஸ்டாலின் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்த்த திமுக ஆட்சியை இழந்துள்ளது. தவெகவுக்கு போட்டியளிப்பதற்காக திமுக விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுகவை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு ரீதியாக 110 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஒரு மாவட்ட செயலாளருக்கு 3 தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்வேன் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தோல்வி திமுகவை ரொம்பவே கலங்கடித்துள்ளது. அதிமுக மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். தவெகவின் கட்டமைப்பு பலமடைந்து கொண்டிருக்கிறது. தவெகவில் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தவெகவுக்கு அரசியலில் போட்டி கொடுப்பதற்காக திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். முக்கியமாக ஜென் ஸி இளைஞர்களை கட்சியில் இணைக்க முயற்சித்து வருகிறார்கள். திமுகவில் நிர்வாகிகளுன் பதவிக்கான வயது வரம்பு மாற்றப்பட்டுள்ளது.

dmk-announces-major-changes-stalin-vows-to-lead-party-back-to-victory

இளைஞர்களுக்கு முக்கியத்துவம்

கிளை செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது 45, பேரூர், நகர செயலாளருக்கு 60 வயது, மாவட்ட செயலாளருக்கு 70 வயது என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பதவியை பொறுத்து 2 அல்லது 3 முறை மட்டுமே தொடர முடியும் என்று விதிகள் மாற்றப்பட்டது. இதனால் பல சீனியர்களின் பதவி பறிபோனது. கட்சிப் பதவிகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டமைப்பு ரீதியாக புதிதாக 110 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ஒரு தொகுதி முதல் அதிகம் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் மெகா பிளான்

இதுகுறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்ருமான மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, "நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை? காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை.

மறுசீரமைப்பு

மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்" எனப் பேசியிருந்தேன். கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும். உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!" என்று கூறியுள்ளார். அவரின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+