கருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்
18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவின் திருவாரூர் தொகுதி வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
Recommended Video

சென்னை: 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவின் திருவாரூர் தொகுதி வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் 20 லோக்சபா தொகுதிகளில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன்தான் திருவாரூர் திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுகவிற்காக 12 வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக உழைத்துவரும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 2007ல் இவர் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதில் இருந்தே அவர் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

விருப்பம்
உள்ளூர் அரசியல் தெரிந்த இவர் தேர்தலில் நிற்பதுதான் சரியாக இருக்கும் திமுக தொண்டர்கள் பேசி வருகிறார்கள். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் திருவாரூரில்தான் தற்போது வசித்து வருகிறார். திமுக மாவட்டச் செயலாளராக இருந்த பூண்டி கலைவாணனின் சகோதரர். . கடந்த 2007ம் வருடம் அரசியல் பகை காரணமாக பூண்டி கலைச்செல்வன் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கியம்
திருவாரூரில் திமுகவை மிகவும் வலுவான கட்சியான மாற்றியதில் பூண்டி கலைச்செல்வன் மற்றும் பூண்டி கலைவாணனுக்கு பெரிய பங்கு உள்ளது. மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் நிற்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியை இரண்டு முறை விட்டுக் கொடுத்துள்ளார் பூண்டி கலைச்செல்வன்.

நெருக்கமான நபர்
இவர் கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானார். கருணாநிதி அந்த தொகுதியில் வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவும் பூண்டி கலைவாணன் ஒருவகையில் காரணம்தான். இவரின் தீவிர உழைப்பிற்கு பரிசாக திமுக சார்பாக போட்டியிடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி தொகுதியில் இவர் போட்டியிடுவதால் பூண்டி கலைவாணன் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications