திமுக துணை பொதுச்செயலாளர்கள் 5ல் இருந்து 7 ஆக உயர்வு.. பொன்முடி - சாமிநாதனுக்கு பதவி - பின்னணி
சென்னை: திமுகவில் தற்போது 5 துணை பொதுச்செயலாளர் பதவி உள்ளது. இந்த பதவிகளில் கனிமொழி, ஆ ராசா, திருச்சி சிவா, அமைச்சர் ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி துணை பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை 5 ல் இருந்து 7 ஆக உயர்த்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து புதிய துணை பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தற்போதைய அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியை திமுக தொடங்கி உள்ளது. அந்த வகையில் தான் திமுகவில் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதாவது திமுகவில் தற்போது துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. இதனை 7 ஆக உயர்த்தும் நோக்கில் ஸ்டாலின் ஆலோசித்தார்.
திமுகவில் தற்போது உள்ள 5 துணை பொதுச்செயலாளர்களின் பதவிகளும் நிரம்பி விட்டன. கனிமொழி எம்.பி., அமைச்சர் ஐ.பெரியசாமி , திருச்சி சிவா எம்பி., ஆ.ராசா எம்பி. அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் இந்த பொறுப்புகளில் செயல்பட்டு வருகின்றனர். இவர்களும் கூடுதலாக மேலும் 2 பேருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்க ஸ்டாலின் விரும்புகிறார்.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இதனால் தான் திமுகவின் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதன்படி திமுகவின் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 2 புதிய பொறுப்புகளில் திமுகவின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தற்போதைய அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஏற்கனவே பொன்முடி துணை பொதுச்செயலாளராக செயல்பட்டவர். தொடர் சர்ச்சைகளால் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொன்முடி தற்போது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் உடையார் சமுதாயத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருகிறார். ஆனால் அவரிடம் இருந்து அமைச்சர் பதவி, அதன்பிறகு கட்சி பதவி பறிக்கப்பட்டது. இதனால் பொன்முடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கவலையடைந்தனர். இப்போது மீண்டும் அவருக்கு கட்சியில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல் முபெ சாமிநாதன் தற்போது செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார். இவர் ஈரோடு மாவட்டம் காங்கேயம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். அடுத்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்கு வலுசேர்க்கும் வகையில் முபெ சாமிநாதனுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications