திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.. முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார் ஸ்டாலின்!
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டம் நடந்து வருகிறது. சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்குகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஆளும் திமுகவை பொறுத்தவரை, 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஒவ்வொரு பூத்களிலும் 30 சதவிகிதம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி இருந்தார்.
இந்தநிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூன் 7 ஆம் தேதி (இன்று) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்தார். கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி வருகிறார்.
முன்னதாக இந்தக் கூட்டம் தொடர்பாக, துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் ஜூன் 7 அன்று சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications