நாள் குறித்த ஸ்டாலின்.. டெல்லியில் கூடும் இந்திய கூட்டணி.. மத்திய அமைச்சர்களாகும் திமுக தலைகள்?
சென்னை: ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில விஷயங்களை முன்னிறுத்துவார் என்று தகவல்கள் வருகின்றன.
தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. இறுதிக்கட்ட வாக்குபதிவிற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தற்போதைய மக்களவை தேர்தலில் ஏழாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் நாளில்.. அதாவது ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்திய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தப்பட்ட விதம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், மோடியின் செயல்பாடு, ரிசல்ட் வந்த பின் என்ன செய்வது, ரிசல்ட் எதிராக வந்தால் என்ன செய்யலாம், ரிசல்ட் இந்திய கூட்டணிக்கு ஆதரவாக வந்தால் யாரை பிரதமராக்குவது என்றெல்லாம் ஆலோசனைகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பரபரப்பு: பெரும் பரபரப்பிற்கு இடையே ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில விஷயங்களை முன்னிறுத்துவார் என்று தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் இந்த இந்திய கூட்டணி மீட்டிங்கிற்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறாராம். தனது கைக்கு வந்த இரண்டு ரிப்போர்டுகளின் அடிப்படையில் அவர் இந்த ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறாராம்.
ரிப்போர்ட் 1 - தமிழ்நாட்டில் புதுச்சேரியில் என்று 40 இடங்களிலும் திமுக வெல்லும் என்று ஸ்டாலினுக்கு உறுதியான ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
ரிப்போர்ட் 2 - மத்திய அரசில் பாஜக வெல்ல வாய்ப்பு குறைவு. மெஜாரிட்டி கிடைக்காது. யாருக்கும் மெஜாரிட்டி வராது. அப்படி இருந்தால் இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும் ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
காங்கிரஸின் கடுமையான பிரச்சார யுக்திகளால் முதல் கட்ட தேர்தலில் பாஜக பின்னடைவையே சந்தித்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக புதிய பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. வேறு யுக்திகள் வேலைக்கு ஆகாத காரணத்தால் மோடி பிரச்சார யுக்தியை மாற்றி உள்ளார். இஸ்லாமிய பிரச்சனைகள், தாலி விவகாரம் என்று எமோஷனலாக மோடி பேச காரணமே தோல்வி பற்றிய அச்சம்தான் என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
இதை இரண்டையும் கேட்டு ஸ்டாலின் உற்சாகம் ஆகி உள்ளாராம். நேற்று மாவட்ட அளவில் நிர்வாகிகள், அமைச்சர்களிடம் ஸ்டாலின் பேசி இருக்கிறார். திமுகவின் உள்ளூர் நிலவரம் தொடங்கி தேர்தல் பணிகள் நடத்தப்பட்ட விதத்தை பாராட்டியும், தகவல்களை கேட்டும் பேசி இருக்கிறார் .
இது போக தேசிய அளவில் இந்திய கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் இருந்து 3-4 அமைச்சர்கள் வர வேண்டும். பெரிய துறைகளை நாம் எடுக்க வேண்டும். யாரை அமைச்சர் ஆக்கலாம். யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ஸ்டாலின் ஆலோசனைகளை செய்து இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications