நீங்களே முடிவு எடுத்தா? மேயர் பிரியாவுடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதம்.. மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு
சென்னை : சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில், மேயர் பிரியா ராஜனிடம் திமுக கவுன்சிலர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில், கொரோனா தொற்று காரணமாக விரைவாக கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக பூஜ்ஜிய நேரம் ரத்து செய்யப்பட்டது.
தாங்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததால் திமுக கவுன்சிலர்கள் உட்பட பலரும் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சியின், மாதாந்திர மாமன்றக் கூட்டம், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டம் கொரோனா தொற்று காரணமாக 2 மணி நேரத்திலேயே முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில், மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில், 17 பேருக்கு மட்டும் கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்பட்டது.

சலசலப்பு
பலருக்கும் கேள்வி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மாநகராட்சி கவுன்சிலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக கவுன்சிலர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் பிரியா பதிலளித்தார். கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசினார். அப்போது பூஜ்ஜிய நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து மேயர் பிரியா உடன் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திமுக கவுன்சிலர்
தி.மு.கவைச் சேர்ந்த கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர், இந்தக் கூட்டத்தில், சீனியர் உறுப்பினர்களான எங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. நேரமில்லா நேரம் ரத்து செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நேரமில்லா நேரத்தில்தான் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகளை பற்றி சொல்ல முடியும். எனவே, மாமன்றக் கூட்டத்தை நாள் முழுதும் நடத்த வேண்டும். யாரிடமும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள் எனத் தெரிவித்தார்.

மேயர் பிரியா
அதற்கு பதிலளித்த சென்னை மேயர் பிரியா, கடந்த மாமன்ற கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் தவிர்த்து, பேசாத உறுப்பினர்களுக்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்பது இல்லை. கொரோனா பரவல் அதிகரித்ததாலேயே நேரமில்லா நேரம் தவிர்க்கப்பட்டது. வருங்காலங்களில் கொரோனா தொற்று குறையும் பட்சத்தில், நேரமில்லா நேரம் மீண்டும் சேர்க்கப்படும் எனப் பதில் அளித்தார்.

கொரோனாவால்
ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசுகையில், கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாகவே மேயர், துணை மேயர், ஆணையர், மண்டல தலைவர்கள் ஆகியோரோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு பூஜ்ஜிய நேரமானது தவிர்க்கப்பட்டது எனத் தெரிவித்தார். இதற்கு கவுன்சிலர் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

தீர்மானங்கள்
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கிட்டத்தட்ட 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பழுதடைந்த பொதுக் கழிப்பிடங்களை இடிப்பதற்கான தீர்மானம்,
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கண்காட்சி அமைப்பதற்கான செலவினங்கள், பள்ளிகளில் பாலியல் குழுக்கள் அமைப்பதற்கும், தொண்டு நிறுவனங்கள் மூலமாக 32 சென்னை மழலையர் பள்ளிகளுக்கு உபகரணங்கள் நிறுவி பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கும் தீர்மானங்கள் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications