களமிறங்கிய டீம்.. திமுக கையில் எடுத்த "வார் ரூம்" அஸ்திரம்! எதிர்க்கட்சிகளுக்கு செக் வைக்கும் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில் திமுக இதற்காக வார் ரூம் ஒன்றை அமைத்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக தீவிரமாக பிரச்சாரங்கள் நடந்து வந்தன. நேற்று முதல்நாள் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவிற்கு வந்தது.

அதிமுக புகார்

அதிமுக புகார்

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆங்காங்கே சில இடங்களில் திமுக பிரச்சனை செய்வதாக அதிமுக புகார் வைத்தது. முக்கியமாக கோவையில் அதிமுகவினரை தேர்தல் பணி செய்ய விடமால் திமுக நிர்வாகிகள் தடுப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி புகார் வைத்தார். அதோடு அவர் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன் கோவையில் போராட்டம் செய்து, கைது செய்யப்பட்டார். தேர்தலில் திமுக மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக வேலுமணி குறிப்பிட்டார். முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆங்காங்கே சில இடங்களில் திமுக பிரச்சனை செய்வதாக அதிமுக புகார் வைத்தது. முக்கியமாக கோவையில் அதிமுகவினரை தேர்தல் பணி செய்ய விடமால் திமுக நிர்வாகிகள் தடுப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி புகார் வைத்தார். அதோடு அவர் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன் கோவையில் போராட்டம் செய்து, கைது செய்யப்பட்டார். தேர்தலில் திமுக மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக வேலுமணி குறிப்பிட்டார்.

திமுக புகார்

திமுக புகார்

அதே சமயம் திமுகவும் இதே புகாரை பல மாவட்டங்களில் வைத்தது. திமுகவின் டாப் தலைகள் புகார்களை வைக்கவில்லை என்றாலும் உள்ளூர் அளவில் திமுக நிர்வாகிகள் பலர் அதிமுக, பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக பண விநியோக புகார்களை வைத்தனர். இதற்காக அப்போதே திமுக வார் ரூம் ஒன்றையும் அமைத்து இருந்தது. எதிர்க்கட்சிகள் பண விநியோகம், பொருள் விநியோகம் செய்தால் அதை பற்றி கட்சி தலைமையிடம் புகார் அளிக்கும் வகையில் திமுக வார் ரூம் அமைத்து இருந்தது.

 வார் ரூம்

வார் ரூம்

இதற்காக திமுக பெரிய டீம் ஒன்றை அமைத்து போன் மூலம் புகார் அளிக்க ஏற்பாடு செய்து இருந்தது. எங்காவது ஒரு இடத்தில் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் மூலம் பண விநியோகம் செய்யப்பட்டால் உடனே திமுக நிர்வாகிகள் அதை பற்றி வார் ரூமில் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் பிரச்சார நேரத்தில் திமுகவிற்கு இது பெரிய உதவியாக இருந்தது. தற்போது வாக்கு பதிவு தொடங்கி உள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய வார் ரூம் அமைக்கப்பட்டள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் செயல்பட்டு வருகின்றது.

போன் செய்யலாம்

போன் செய்யலாம்

தேர்தல் நடைபெறும் இடங்களிலிருந்து புகார்கள் & தகவல்களை கட்சிக்கு தெரிவிக்க விரும்பும் கட்சியினர் மின்னஞ்சல், தொலைபேசி வழியாக வார் ரூமை தொடர்பு கொள்ளவும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுக்க திமுக நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபட முயற்சிக்கும். நிர்வாகிகள் கவனமாக செயல்பட்டு அதை பற்றிய புகார்களை தலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று திமுக அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+