திமுக - தேமுதிக கூட்டணி குறித்த கேள்வி.. முகம் மாறிய எடப்பாடி! பதிலளிக்க மறுப்பு!
சென்னை: தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தொடர்பாக கடந்த இரு மாதங்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. அக்கட்சிக்கு 7 சட்டமன்ற தொகுதிகளும் 1 ராஜ்யசபா சீட்டும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் இணைந்தது அதிமுகவிற்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. தேமுதிக திமுகவுடன் இணைந்து தொடர்பாக செய்தியாளர்களிடம் எடப்பாடியுடன் கேட்டனர். இதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

திமுகவுடன் தேமுதிக கூட்டணி
வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக கடந்த இரு மாதங்களாக சஸ்பென்ஸ் வைத்து வந்த தேமுதிக, இன்று திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே சுதிஷ் ஆகியோர் சந்தித்து இந்த கூட்டணியை உறுதி செய்தனர்.
தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுத்து அதிமுக மற்றும் பாஜகவிற்கு திமுக அதிர்ச்சி கொடுத்துள்ளது. தங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வரும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி நம்பிக்கொண்டு இருந்த நேரத்தில் ஸ்டாலின் செய்த ஸ்மார்ட் மூவ், தேமுதிகவை அதிரடி முடிவு எடுக்கவைத்துள்ளது.
எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேள்வி
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக கூட கோவை ஈஷா யோக மைய நிகழ்ச்சியின் போது எஸ்பி வேலுமணியை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். ஆன்மிக நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
தேமுதிக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் வரும் என்று பெரிதும் நம்பியிருந்த அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியாகவே இன்றைய தேமுதிக முடிவு அமைந்துள்ளது. தேமுதிக கூட்டணி அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
முகம் மாறிய எடப்பாடி பழனிசாமி
அப்போது டக்கென முகம் மாறிய எடப்பாடி, பிறகு வந்து பேசுகிறேன் என்று கூறிவிட்டு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டு சென்றுவிட்டார். அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசி வந்தார். தேமுதிகவையும் மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி பேசியதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தேமுதிகவும் திமுக கூட்டணிக்கு சென்று இருக்கிறது. தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பாஜகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. தமிழக பாஜக தனது எக்ஸ் தளத்தில், "விஜயகாந்த் படத்துடன் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது" என்று விமர்சித்துள்ளது.
-
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications