DMK DMDK alliance: திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை இடங்கள்.. பிரேமலதா அதிரடி முடிவுக்கு என்ன காரணம்?
சென்னை: கடந்த ஒன்றரை மாதமாக யாருடன் கூட்டணி என்பது தொடர்பான முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்த தேமுதிக, திடீர் திருப்பமாக இன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள் வழங்க வாய்ப்பு உள்ளது? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தற்போதய நிலவரப்படி திமுக கூட்டணி வலுவாக உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்
அதே நேரத்த்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என குரல் கொடுத்து வருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதில் தாமதம் ஆகி வருகிறது. இதற்கு இடையே, தேமுதிக எந்த பக்கம் செல்லும் என்பது குறித்த பேச்சு கடந்த சில நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது.
கடந்த ஜனவரியில் கடலூரில் நடைபெற்ற மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பதாக தேமுதிக கூறியது. ஆனால், கூட்டணி யாருடன் என்பதை முடிவு செய்துவிட்டோம் என்றும் உரிய நேரத்தில் அறிவிப்போம் என ட்விஸ்ட் வைத்தது. அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளிடமும் தேமுதிக பேசி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 + 1
எனினும், இதனை பிரேமலதா விஜயகாந்த் கண்டித்தார். நாங்கள் யாருடனும் பேசவில்லை என்று கூறியிருந்தார். அதிமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க உறுதி அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், தேமுதிகவிற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின் போது சீட் கொடுக்க அதிமுக மறுத்தது.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இத்தகைய பரபரப்புக்கு நடுவே திடீர் திருப்பமாக தேமுதிக, திமுக பக்கம் இணைந்துள்ளது. தேமுதிகவிற்கு 7 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழகத்தில் 6 இடங்களுக்கான மாநிலங்களை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு திமுக செக்?
இதில் திமுக தரப்பில் 4 பேரையும் அதிமுக தரப்பில் 2 பேரையும் நிறுத்த முடியும். இந்த தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே தேமுதிக , திமுக கூட்டணியில் ஐக்கியம் ஆகியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை பிரேமலதா சந்தித்தார். கோவையில் நடைபெற்ற ஈஷா யோகா நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடி அரசியல் திருப்பமாக இந்த முடிவை தேமுதிக எடுத்துள்ளது. தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைத்து இருப்பது மூலம் காங்கிரஸ் கட்சிக்கு திமுக செக் வைத்ததாகவே பார்க்கப்படுகிறது.
500 வாக்குகள் கூட முடிவு செய்யலாம்
ஏனெனில், கூட்டணியில் புதிய கட்சி இணைந்து இருப்பதால் அதிக இடங்களை கொடுக்க முடியாது என்பதை சொல்லும் விதமாக இது அமைந்து இருப்பதாகவும் தெரிகிறது. விஜய் கட்சி பெரிய அளவில் வாக்குகளை பிரிக்கலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை 500, 1000 வாக்குகள் கூட முடிவு செய்யலாம். எனவே எந்த ஒரு சிறு வாய்ப்பையும் விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்பட்டையில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு திமுக இணைத்து இருப்பதாக தெரிகிறது. தேமுதிக கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது.
அதிரடி முடிவுக்கு என்ன காரணம்?
அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டு தேமுதிக படுதோல்வி அடைந்தது. போதாக்குறைக்கு ராஜ்யசபா சீட் விவகாரத்திலும் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த முறையும் ராஜ்யபா சீட் கொடுக்க அதிமுக தயக்கம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
அதேபோல தேமுதிக நிர்வாகிகளும் வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியாக இருக்க வேண்டும், அதற்கு திமுக கூட்டணியில் இணைவதே பொருத்தமாக இருக்கும் என்று வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பிரேமலதா விஜயகாந்த் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் எனத்தெரிகிரது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications