Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைமுக தேர்தல்: தலைமை விருப்பத்தை மீறி தனி ஆட்டம் போட்ட திமுக நிர்வாகிகள்.. அப்செட்டில் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மேயர், துணை மேயர் மறைமுக தேர்தலில் திமுக தலைமையை மீறி பல மாவட்டங்களில் தேர்தல் பொறுப்பாளர்கள் தனி ஆவர்த்தனம் நடத்தியிருப்பது மேலிடத்தை கோபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநகராட்சி மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் திமுக அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினரே மாற்று வேட்பாளரை நிறுத்தி ஜெயிக்க வைத்த கூத்துகள், திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக திமுக வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிக்க வைத்து கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஆப்பு வைத்த நிகழ்வுகளால் மறைமுக தேர்தலில் ஏகத்துக்கும் அதிர்ச்சிகள், பரபரப்புகள் பல்வேறு மாவட்டங்களில் களை கட்டி முடிந்திருக்கின்றன.

கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள்

கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள்

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விசிகவுக்கு ஒதுக்கியது திமுக தலைமை. ஆனால், வி.சி.க. வேட்பாளரை வீழ்த்தி தங்களின் வேட்பாளர் சாந்தி புஷ்பராஜை ஜெயிக்க வைத்துள்ளது திமுக. இதனால் சாலை மறியல் செய்து தங்களின் எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள் சிறுத்தைகள்.
அதேபோல, கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் விசிகவை வீழ்த்தி திமுக வெற்றிபெற்றது. அங்கு விசிகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிரிஜா 3 வாக்குகள் பெற்ற நிலையில் திமுகவின் ஜெயந்தி 23 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் கடும் கோபமடைந்துள்ளது விடுதலை சிறுத்தைகள்.

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி காலி

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி காலி

கடலூர் மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படது. காங்கிரஸ் வேட்பாளராக வேல்முருகன் நிறுத்தப்பட்டார். தேர்தலில் இவருக்கு 7 வாக்குகள் கிடைத்தன. ஆனால் இவரை எதிர்த்து திமுக சார்பில் நிறுத்தப்பட்ட சம்சாத் பேகத்திற்கு 8 வாக்குகள் கிடைத்ததால் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி திமுக ஜெயித்துள்ளது. இதனையடுத்து, ''திமுக தங்களுக்கு துரோகம் செய்துவிட்டது. திமுக தலைமையின் கட்டுப்பாட்டில் திமுகவினர் இல்லையா? ‘' என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பிரமணியத்தை வீழ்த்தி திமுக வேட்பாளர் குமார் வெற்றிபெற்றார். இதனால் அதிர்ச்சியடைந்த தோழர்கள், என்ன செய்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலினிடம் பஞ்சாயத்து

ஸ்டாலினிடம் பஞ்சாயத்து

இப்படி கூட்டணி கட்சிகளுக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு ஜெயிப்பதும், திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்த வைத்து திமுகவினர் ஜெயிப்பதும் பல அதிருப்திகளை உருவாக்கியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவுகளை மீறியும் கட்சி கட்டுப்பாடுகளை மீறியும் மாவட்ட திமுகவினர் நடந்து கொள்வதாக ஸ்டாலினிடம் பஞ்சாயத்து போயிருக்கிறது.

திமுக நிலைப்பாடு

திமுக நிலைப்பாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவுக்கு முன்பாக திமுக தலைமை கூட்டணி கட்சிகளிடம் மிகவும் கறார் காட்டியது. ஆனால் ரிசல்ட் வெளியே வந்த பிறகு தலைமையின் போக்கில் கனிவு தென்பட்டது. கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி அனைத்து தரப்பையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

 கூட்டணி கட்சிகள் நெருக்கடி

கூட்டணி கட்சிகள் நெருக்கடி

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என கூட்டணியில் உள்ள அத்தனை பேரும் மாநகராட்சியில் துணை மேயர் பதவி, நகராட்சியில் துணைத் தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததன் விளைவாக திமுக தலைமை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்று தெரிவிக்கிறது அறிவாலய வட்டாரம்.

கூட்டணியை விட்டு வெளியேற எச்சரிக்கை

கூட்டணியை விட்டு வெளியேற எச்சரிக்கை

தேர்தலுக்கு முன்பாக பேரூராட்சி அளவில்தான் பதவிகள் தரமுடியும் என்று கூறியிருந்தது திமுக தலைமை. ஆனால், "இதற்காகவா கூட்டணியில் இருக்க வேண்டும்.. இருக்கட்டுமா வெளியேறட்டுமா, சொல்லுங்கள்" என்ற தொனியில் சில கூட்டணிக் கட்சியின் தலைமை திமுக தலைமைக்கு தூது விட்ட பிறகுதான் இத்தனை மாற்றங்களும் நடந்தேறி உள்ளதாம். இருப்பினும் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கியதில் அங்குள்ள திமுக கவுன்சிலர்கள் பலரும் அப்செட்டில் உள்ளனர். மேயர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை ஒதுக்க வேண்டும் என்றால் தேர்தலுக்கு முன்பே கூட்டணி கட்சிகளுக்கு அதிக வார்டு ஒதுக்கீடு செய்து இருக்க முடியும். ஆனால் அதிக வார்டுகளில் திமுக வெற்றி பெற்ற போதிலும் குறைவான தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரசுக்கு மேயர் பதவியா, என்ற கேள்விகள் கும்பகோணத்தை தாண்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் மத்தியிலும் எதிரொலித்து வருவதை கவனிக்க முடிகின்றது.

Recommended Video

    தேசிய அரசியலில் முதல்வர் Stalin? அச்சாரம் போட்ட அண்ணா அறிவாலயம்
     தேர்தல் பொறுப்பாளர்கள் முடிவு

    தேர்தல் பொறுப்பாளர்கள் முடிவு

    இது ஒரு பக்கம் என்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் ஆகியோரில் யாராவது தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையை பொருத்தளவில் அமைச்சர்கள் இல்லாத காரணத்தால் செந்தில்பாலாஜி தேர்தல் பொறுப்பாளர் என்ற வகையில் மேயர் தேர்வையும் கண்காணித்து வந்தார். இப்படி ஒரு சில இடங்களில் நடந்தது. ஆனால் பெரும்பாலும் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் மேயர் துணை மேயர் தேர்வில், முக்கிய பங்காற்றியுள்ளனர்.

    தலைமை விருப்பம் இல்லை

    தலைமை விருப்பம் இல்லை

    சில மாநகராட்சிகள், நகராட்சிகள் பல பேரூராட்சிகளில் தலைமை விருப்பத்துக்கு மாறாக இந்த தேர்தல் பொறுப்பாளர்கள் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தலைமை பதவிக்கு கொண்டு வந்துள்ளனர். இது தவிர பல இடங்களிலும் பணம் விளையாடி உள்ளது. சுயேட்சை கவுன்சிலர்களை இழுக்க ஒரு கோடி வரை அள்ளி வீசப்பட்டு இருக்கிறது என்கிறது கள நிலவரம். கார் வேண்டும் என்று கேட்டால் டொயோட்டோ இன்னோவா கார்.. பணம் தேவை என்றால் அதற்கு ஏற்ப பணம் என கவுன்சிலர்கள் விருப்பத்தின்படி பணம் விளையாடி உள்ளது. இதில் எந்த கட்சிக்கும் எந்த கட்சியும் சளைத்தது இல்லை.

     பணம் பாய்ந்தது

    பணம் பாய்ந்தது

    பணம் விளையாடியதன் காரணமாக சில நேரங்களில் தலைமை விருப்பத்திற்கு மாறாக தலைவர் தேர்வு நடந்து முடிந்துள்ளது. ஒரு பக்கம் தலைமை விருப்பத்திற்கு மாறாக ஆங்காங்கு குறுநில மன்னர்கள் போல சிலர் செயல்பட்டது, சில பகுதிகளில் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கிய பதவிகளை, இவர்கள் தட்டிப்பறித்தது என இத்தனையும் திமுக தலைமைக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் சீனியர்கள், அமைச்சர்கள், மா.செ.க்கள் உள்ளிட்டவர்களோடு அவசர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை காத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+