வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு? கோட்டையில் கலக்கல் பிளான்!
சென்னை: 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் அட்டைதாரருக்கும் 5,000 ரூபாய் வழங்க, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் டாப் தலைகள் சிலர் நிதித்துறை தரப்பிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் தமிழக சட்டசபை தேர்தல் வரும் நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு
தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்த நன்னாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை வெள்ளம் வழங்கப்படுமா என்ற கேள்வி உள்ளது. அதை பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படலாம்.
பொங்கல் பரிசு:
மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இருப்பினும், மாநிலத்தின் நிதி நிலை காரணமாக அதிகாரிகள் சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ஒரு பெரிய கவலையாக உள்ளது. மேலும், அரசு ஏற்கனவே பல நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. அதோடு மகளிர் உரிமைத்தொகையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் இதுவரை 44 லட்சம் பெண்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் பெறப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாக துணை முதல்வர் தெரிவித்தார். நவம்பர் வரை இத்திட்டம் நடைபெறுகிறது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி நெருக்கடி
இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். இதற்கு இடையே பொங்கலுக்கு பணம் கொடுப்பது இன்னும் சிக்கலாக அமையும். இருப்பினும், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்பதில் தி.மு.க. தலைமை உறுதியாக உள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இரண்டு கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இதற்கு சுமார் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிற துறைகளில் இருந்து நிதியை மாற்றுவது அல்லது தற்காலிக பொருளாதார வழிகளை உருவாக்குவது போன்ற நிதி ஆதாரங்களை அடையாளம் காண விவாதங்கள் நடந்து வருகின்றன.
அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை, இறுதி செய்யப்பட்டால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு நலத்திட்டமாகவும், அரசியல் ரீதியாக முக்கிய முடிவாகவும் இருக்கலாம். தி.மு.க. அரசு இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பண்டிகைக்கு நெருக்கமாக ஒரு அறிவிப்பு வெளியாகலாம் என்று உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications