வானதிக்கு எதுக்கு இந்த வேலை.. "தாமரை"யுடன் வந்து.. பாய்ந்து வந்த திமுக.. கொந்தளித்த காங்கிரஸ்..!
சென்னை: வானதிக்கு எதுக்கு இந்த வேலை? ஓட்டுப்போட வரும்போது, அவரது புடவையில் தாமரை சின்னம் இருந்ததாமே.. அதுதான் இப்போது சிக்கலை தந்துள்ளது.
இன்று கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு வாக்களித்து வந்தார்... வரிசையில் நின்று வாக்களித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று உற்சாகத்துடன் சொன்னார்.

பார்டர்
தற்போது வானதியின் மீது பகீர் புகார் கிளம்பி உள்ளது.. அதற்கு காரணம், பச்சை நிற பார்டர் வைத்த மஞ்சள் கலர் சேலையில் வந்திருந்தார் வானதி.. அதில் பார்டருக்கு பக்கத்தில் தாமரை சின்னத்தை பொறித்திருந்தார். இந்த சின்னத்துடன் அவர் ஓட்டுப்போட வந்ததுதான் சர்ச்சையாகி உள்ளது.. வாக்கு சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் எந்த சின்னமும் இடம் பெறக் கூடாது, காட்டக் கூடாது என்பதுதான் தேர்தல் விதி...

கமல்
இதைதான் வானதி மீறியதாக சொல்லப்படுகிறது.. ஏற்கனவே, வானதி சீனிவாசன், டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களோடு சாலை மறியல் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்.. இதைதான் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல்வர் வேட்பாளரான கமல்ஹாசனும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதி
இதனால், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் ஓரணியில் திரண்டு வானதிக்கு எதிராக மறியல் செய்து வரும் நிலையில், இந்த பச்சை பார்டர் தாமரை சின்னமும் பிரச்சனையும் வெடித்துள்ளது. தேர்தல் விதியை மீறி தாமரை சின்னத்துடன் வாக்களித்த வானதியை தகுதிநீக்கம் செய்ய காங்கிரஸ் வேட்பாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இப்படித்தான், தாமரை சின்னத்தை காட்டிய மோடி மீது வழக்கு பதியப்பட்டது.. அதே ரூட்டில்தான் காங்கிரஸாரும் நெருக்கடி தந்து வருகின்றனர்.

மாபா
அதேபோல, பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவின் மாபா பாண்டியராஜன் மீதும் இதே புகார் எழுந்துள்ளது.. ஆவடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாபா பாண்டியராஜன், ஒரு துண்டில் இரட்டை இலை சின்னத்துடன் ஓட்டுப் போட வந்திருக்கிறார்.. இதுவும் நடத்தை விதி மீறலாகும்.. இதையடுத்து, இவர்கள் 2 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்து வருகிறது.