Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் கொளுத்திய திரி.. மெகா பிளானுடன் களமிறங்கும் திமுக ஐடி விங்! பாஜகவுக்கு குடைச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியபடி கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே கூட்டாட்சிக் கொள்கையை வலுப்படுத்தும். இந்தக் கோரிக்கையை இந்திய ஒன்றிய அளவில் முன்னெடுப்பதில் திமுக ஐடி விங் விரிவான செயல்திட்டத்துடன் களமிறங்கத் தயாராக இருக்கிறது என திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் முன்னெடுப்புகள் தமிழகம் தாண்டி தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்தி திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது.

முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களின் பேச்சுகளும், சமூக வலைதளங்களில் வட மாநிலங்களிலும் மிகுதியாக கவனிக்கப்பட்டு வருகின்றன. வட மாநிலங்களிலும் கவனம் பெறும் வகையில் திமுக ஐடி விங் மூலம், திமுகவினரின் பேச்சுகள் சப் டைட்டில்களோடு வெளியிடப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கும் முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், நாடு தழுவிய அளவில் முன்னெடுக்க திமுக தகவல் தொழில்நுட்ப அணி தயாராகி வருவதாக, டிஆர்பி ராஜா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

கல்வி திட்டங்கள்

கல்வி திட்டங்கள்

சமீபத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கல்வி திட்டங்களைத் தீட்டி வருகிறது. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க புதுமைப்பெண் என்ற உயர்கல்வி உறுதி திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு என்பது போன்ற பல்வேறு கல்வி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இவை தமிழக எல்லையைத் தாண்டி அனைத்து மாநில அரசுகளும் உன்னிப்பாக கவனிக்கும் திட்டங்களாக அமைந்துள்ளன.

மாநில பட்டியலுக்கு

மாநில பட்டியலுக்கு

எந்தவொரு சூழ்நிலையிலும் யாராலும் ஒருவரிடம் இருந்து பறிக்க முடியாத சொத்து கல்வி. கல்விச் சொத்தை மக்களுக்கு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. எனவே இதுபோன்ற மாநில அரசின் முயற்சிகளை ஆதரித்து ஊக்கமளிக்கும் வகையில், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்ட போதும், நடைமுறைக்கு வந்தபோதும் மாநில பட்டியலில்தான் கல்வி இருந்தது. அவசர நிலை ஆட்சி நடந்த காலகட்டத்தில்தான் பொதுப்பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டது. எனவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றும்படி மத்திய அரசை குறிப்பாக, பிரதமரை கேட்டுக்கொள்கிறேன் என மேடையில் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

திமுக ஐடி விங்

திமுக ஐடி விங்

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கைக்கு நாடு முழுவதும் ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட தயாராகி வருகிறது திமுக தகவல் தொழில்நுட்ப அணி. முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கை, அதனை வலுவாக நியாயப்படுத்தும் வாதங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பெரிய அளவில் பரப்ப திமுக ஐடி விங் திட்டமிட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் எழுந்துள்ள இந்தக் கோரிக்கை வரும் நாட்களில் மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கும் என்றும், மத்திய பாஜகவுக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தடையாக இருப்பது ஆளுநர் பதவி

தடையாக இருப்பது ஆளுநர் பதவி

இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநில உரிமைகளுக்குப் பெருந்தடையாக இருப்பது ஆளுநர் என்கிற நியமனப் பதவி. அதனைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் போக்கு தொடர்வது கூட்டாட்சி முறைக்கு ஏற்றதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் தீர்மானங்களை, சட்டமுன்வடிவுகளை ஆளுநர் கிடப்பில் போடுவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்பதை 7 பேர் விடுதலைக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது. இதற்குப் பிறகும், மாநில அரசின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு மாறாக ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும்.

களமிறங்க ரெடி

களமிறங்க ரெடி

உயர்கல்வி நிலையங்களைத் தன்னுடைய சங்கித்வா கொள்கைக்கான பிரச்சாரக் களமாக மாற்ற நினைக்கும் ஆளுநரின் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். அதன் முதற்கட்டமாக, திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சிகளும் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள மனுவின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்குவதே சரியானத் தீர்வாக அமையும். நமது முதலமைச்சர் வலியுறுத்தியபடி கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே கூட்டாட்சிக் கொள்கையை வலுப்படுத்தும். கழகத் தலைவர் அவர்களின் உன்னதமான இந்தக் கோரிக்கையை இந்திய ஒன்றிய அளவில் முன்னெடுப்பதில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி விரிவான செயல்திட்டத்துடன் களமிறங்கத் தயாராக இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+