"கனிமொழிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி?" டிகேஎஸ் இளங்கோவன் சொன்ன வார்த்தை!
சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு புதிய வழங்கப்பட உள்ளது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் திரைக்கு வந்தது முதல், ராஜராஜ சோழன் பற்றிய விவாதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ராஜராஜ சோழனை இந்து அரசனாக்கிவிட்டனர் என்று இயக்குநர் வெற்றிமாறன் குற்றம் சாட்டி இருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியது.
பாஜக உள்ளிட்ட கட்சியினர் இயக்குநர் வெற்றி மாறனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மறுமுனையில் விசிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் இயக்குநர் வெற்றி மாறனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெற்றி மாறனுக்கு ஆதரவு
குறிப்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற ஒரு மதமே இல்லை. சைவமும் வைணவமும் மட்டும்தான் இருந்தது என்று தெரிவித்தார். அதேபோல் சீமான் கூறுகையில், ராஜராஜ சோழன் சைவ சமயத்தைச் சேர்ந்தவன் என்றும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியா என்ற நாடே கிடையாது என்று தெரிவித்தார்.

டிகேஎஸ் இளங்கோவன்
இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக பொதுக்குழு என்பது ஐந்து ஆண்டுகள் ஒரு முறை நடைபெறுவது வழக்கம், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை தேர்ந்தெடுப்பதற்காக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

ராஜராஜ சோழன் விவகாரம்
தொடர்ந்து ராஜராஜ சோழன் விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ராஜராஜ சோழன் மன்னனாக இருந்த போது இந்து மதம் என்ற ஒரு மதம் இருந்ததாக வரலாறு இல்லை. சைவம் மற்றும் வைணவம் தான் இருந்தது. அதனால்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று கூறுவார்கள். சைவ - வைணவ போராட்டம் என்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ராஜராஜ சோழன் சைவ மன்னன்தான் என்று தெரிவித்தார்.

கனிமொழிக்கு புதிய பதவி
தொடர்ந்து திமுகவின் மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிக்கும் கனிமொழிக்கு புதிய பதவி வழங்கப்பட இருப்பதாக வெளியான தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கனிமொழிக்கு பதவி தருவது குறித்து தலைவர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகியுள்ளார்.
இதனால் திமுகவின் ஐந்து துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் விலகியுள்ள நிலையில், மகளிர் ஒருவர் துணைப் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்ற திமுகவின் சட்ட விதியின் காரணமாக அந்த பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications