துரைமுருகன் விலகினால் பொதுச்செயலாளர் யார்? உதயநிதிக்கு செயல் தலைவர்? அறிவாலயத்தில் யுத்தம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அமைத்த மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கில் திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பில் பலத்த புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுச்செயலாளர் பதவி, செயல் தலைவர் பொறுப்பு மற்றும் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பான விவகாரங்களில் தலைமைக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

DMK Udhayanidhi Stalin Udhayanidhi Stalin

துரைமுருகன் விலகினால் அடுத்த பொதுச்செயலாளர் யார்?

கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள துரைமுருகன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால், அடுத்த பொதுச்செயலாளராக யாரை நியமிப்பது என்பதில் அறிவாலயத்தில் இரு வேறு துருவங்களாகக் கருத்துகள் நிலவுகின்றன.

கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என காய்நகர்த்தி வரும் வேளையில், தற்போதைய கள எதார்த்தத்திற்கு ஏற்ப இளைய தலைமுறை அல்லது மாற்று சமூகப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதனால் ஒருமித்த முடிவை எட்டுவதில் மு.க.ஸ்டாலினுக்குக் கடுமையான சவால் எழுந்துள்ளது.

உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி தேவையா?

துரைமுருகன் விவகாரம் ஒருபுறமிருக்க, உதயநிதி ஸ்டாலினை திமுகவின் செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவு வட்டாரங்களும், இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் தலைமைக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

கட்சியின் கட்டமைப்பை இளைய தலைமுறையினரை நோக்கி நகர்த்தும் விதமாக, உதயநிதி ஸ்டாலினை திமுகவின் செயல் தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கட்சியில் புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. குறிப்பாக, 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாது என்ற புதிய விதியை அமல்படுத்தவும், பதவி இழக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு கட்சியில் மாற்று பொறுப்புகள் வழங்கவும் தலைமை திட்டமிட்டுள்ளது.

அதேநேரம், கட்சியில் உள்ள மற்றொரு தரப்பு இந்த யோசனைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. "கட்சித் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினே இன்னும் முழு வீச்சுடன் சுறுசுறுப்பாகவும் தீவிர களப்பணியிலும் இயங்கி வருகிறார்; அப்படி இருக்கும்போது இப்போதே செயல் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கி அவருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது எதற்கு?" என்ற வாதத்தை மூத்த நிர்வாகிகள் முன்வைத்து வருகின்றனர்.

மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மூத்த தலைவர்கள் எதிர்ப்பு

நிர்வாக வசதிக்காகவும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் திமுகவின் மாவட்டக் கழகங்களை 78-லிருந்து 100-க்கும் மேலாகப் பிரிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தங்கள் செல்வாக்கையும் எல்லைகளையும் இழக்க விரும்பாத தற்போதைய மூத்த மாவட்டச் செயலாளர்கள், மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முடிவுக்குக் கடுமையான முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றனர்.

கட்சி தாவல் பயத்தில் தலைமை

மாவட்டச் செயலாளர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல், அடிமட்ட அளவில் ஒன்றிய மற்றும் வார்டு செயலாளர்களையும் மாற்ற வேண்டும் என்ற பரிந்துரைகள் எழுந்துள்ளன. ஆனால், அடிமட்ட நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்கினால் அவர்கள் அதிருப்தியடைந்து ஆளுங்கட்சி அல்லது தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குத் தாவிவிடுவார்களோ என்ற அச்சமும் தலைமையைத் தொற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தவெகவின் எழுச்சியால் பின்னடைவைச் சந்தித்த திமுக, உட்கட்சி மோதல்களையும் நிர்வாகிகள் வெளியேற்றத்தையும் எவ்வாறு கட்டுப்படுத்தப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+