நம்ம கன்ட்ரோல்ல இல்லை.. ‘லகான்’ அவர்கிட்ட இருக்கு.. அமைச்சர்கள் ஓப்பன் டாக்! புயல் வீசும் சம்பவம்!
சென்னை : திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக, அதிகாரிகள் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை, லகான் பாஜக - ஆளுநர் வசம் உள்ளது எனப் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே பல கட்டங்களாக முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். எனினும், அரசுக்கும், அமைச்சர்களுக்கும் அதிகாரிகள் பலர் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.
அமைச்சர்கள் - அதிகாரிகள் மோதல் போக்கு இலமறை காயாக இருந்து வந்த நிலையில், சமீப நாட்களாக, அமைச்சர்கள் இதுபற்றி வெளிப்படையாகவே பேசத் தொடங்கியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் முக்கிய அமைச்சர்களான கேஎன். நேரு, துரைமுருகன் ஆகியோர் வெளிப்படையாக லகான் தங்கள் கையில் இல்லை என்கிற ரீதியில் பேசியிருப்பது அதிகாரிகள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி மாற்றங்கள்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் தலைமை செயலர், காவல்துறை டிஜிபி தொடங்கி, பெரும்பாலான அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டனர். முக்கிய அதிகாரிகள் பலர் இலாகா மாற்றம் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த மாற்றம் அவ்வப்போது நடைபெற்று வந்துள்ளது. அதேபோல் ஐபிஎஸ் அதிகாரிகளும் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறார்கள். திமுக அரசின் செயல்பாட்டுக்குத் தோதான அதிகாரிகளையே முதல்வர் ஸ்டாலின் நியமித்து வருவதாகக் கூறப்பட்டது.

முணுமுணுப்புகள்
எனினும், பல துறைகளில் அமைச்சர்களிடையே இன்னும் முணுமுணுப்புகள் இருந்து வருகின்றன. பல்வேறு துறைகளில் அமைச்சர்ளுக்கும் - துறையின் உயர் அலுவலர்களுக்கும் இடையேயான உறவே இன்னும் சீராக அமையவில்லை என்கிறார்கள். அமைச்சர்கள் vs அதிகாரிகள் யுத்தத்தால் பெரும்பாலான பணிகள் முடங்குவதாகவும் கூறப்படுகிறது. பல செயலர்களின் துறைகள் மாற்றப்பட்டாலும் கூட இன்னும் இந்த நிலையே நீடிப்பதாகச் சொல்கிறார்கள்.

கைமாறும் ஃபைல்கள்
இதற்கிடையே, தமிழக அரசில் பணியாற்றும் முக்கியமான அதிகாரிகள் பலர் மூலம், திமுக அரசு மற்றும் துறைசார்ந்த ரகசியங்கள் பாஜகவுக்கு கைமாறுவதாகவும் திமுகவினர் மத்தியில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மூலம், ஆளுநர் ரவிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் ஃபைல்கள் கைமாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. தலைமைக்கும் இது தொடர்பான சந்தேகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

களையெடுக்க முடியவில்லை
சில வாரங்களுக்கு முன்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பல்வேறு துறைகளின் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருந்தார். அதில், டெண்டரே விடாத, துறை அளவில் மட்டும் பேசப்பட்ட விவகாரங்களும் அடக்கம். அதிகாரிகளின் துணை இன்றி அது அண்ணாமலைக்குத் தெரியவர வாய்ப்பில்லை என அப்போதே மேல்மட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டது. எனினும், எங்கெங்கும் ஊடுருவியிருக்கும் பாஜக ஆதரவு அதிகாரிகளை களையெடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

வெட்கத்தை விட்டுச் சொல்றேன்
இதன் தொடர்ச்சியாகவே சில நாட்களுக்கு முன்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஒரு கூட்டத்தில் பேசுகையில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்க்கட்சியினர் போல் செயல்பட்டு வருகிறார். பாஜகவோ தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் வெளிப்படையாக சொல்கிறேன், வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன், இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள்." எனத் தெரிவித்தார்.

நாம ஆட்சிக்கு வந்ததே பிடிக்கல
அதேபோல நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் திமுக கூட்டம் ஒன்றில் பேசுகையில், "அதிகாரிகள் பலர் நம் வழிக்கு ஒத்துழைப்பு தருவவில்லை. சில அதிகாரிகளுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததே பிடிக்கவில்லை. அவர்களை நாம் வெறுக்க முடியாது. ஒரு பிடிஓவிடம் நீங்கள் இவ்வளவு பாடுபடுகிறீர்கள் என்றால் நாங்கள் எப்படி பாடுபடுவோம்? நீங்களும் நாங்களும் இல்லாமல் இந்த ஆட்சி இல்லை. இந்த நிலையை எல்லாம் மாற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் லகான் இன்னும் சரியாக எங்கள் கைக்கு வரவில்லை. ஆளுநர் வேறு லகானை பிடித்துக்கொண்டார். இல்லாவிட்டால் எவ்வளவோ செய்திருப்போம்." என ஆதங்கத்தோடு பேசியுள்ளார்.

தீவிரமடையும் குமுறல்கள்
தமிழக அரசின் உயரதிகாரிகளின் செயல்பாடுகள் அரசுக்கு குடைச்சல் கொடுப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், அமைச்சர்களே அடுத்தடுத்து ஓப்பனாக இதுபற்றிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் கொள்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அதிகாரிகள் சிலர் செயல்படுவதையும், லகான் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் அமைச்சர்களே வெளிப்படையாகப் பேசியிருப்பது ஆளும் தரப்பு வட்டாரத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications