Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொட்டாலே உதிருது.. புளியந்தோப்பு கட்டிடம்.. ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை: திமுக பரந்தாமன்

புளியந்தோப்பு கட்டிடம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டிடம் குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அப்போது புளியந்தோப்பு கட்டட ஒப்பந்தக்காரர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும்,கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் அங்கிருந்த மக்களை வெளியேற்றிவிட்டு 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை ரூ. 112.16 கோடி செலவில் ஏ,பி,சி,டி என்று 4 பிளாக்குகளில் 864 வீடுகள் கட்டப்பட்டன.. இதை கட்டி முடிக்க மொத்தம் 17 மாதங்கள் ஆனது..

9 அடுக்கு மாடி கொண்ட இந்த குடியிருப்பில் லிப்ட் வசதிகளும் உண்டு.. இதே போன்று அதே இடத்தில் 2019 முதல் 2021 வரை 18 மாதங்களில் 139.13 கோடி ரூபாய் செலவில் 1056 வீடுகள் கட்டப்பட்டன... இந்த குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

 தமிழகம்

தமிழகம்

இப்படிப்பட்ட சமயத்தில்தான் தொற்று பரவல் தமிழகத்திற்குள் நுழைந்தது.. எனவே, கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தொற்று அதிகமிருந்த நேரத்தில் தற்காலிக ஆஸ்பத்திரிகளாக பயன்படுத்தப்பட்டன... இபபோது தொற்று குறைந்துவிட்டதால், மறுபடியும் அந்த வாரிய குடியிருப்புகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்..

கட்டிடம்

கட்டிடம்

ஆனால், அந்த வீட்டின் சுற்றுசுவர் பில்லர் படிக்கட்டுகள் உறுதியாக இல்லை என்கிறார்கள்.. அவை அனைத்தும் பெயர்ந்து பல வருடங்கள் ஆன கட்டிடம் போல இருப்பதாகவும், அதனால் அங்கே குடியிருக்கவே பயமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தனர்... இது விவகாரமாகவும் வெடித்தது.

 குடியிருப்புவாசிகள்

குடியிருப்புவாசிகள்

அந்த வீடுகளின் சுவர்கள், லிப்ட், கரண்ட், குடிநீர் குழாய்கள் என எல்லாமே உடைந்து சிதலமடைந்து காணப்படுவதாகவும், சுவர்களை தொட்டாலே பெயர்ந்து கொண்டு கொட்டுவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்திருந்தனர்.. இது குறித்த காட்சிகள் சோஷியல் மீடியாவிலும் வைரலானது.

 தொட்டாலே உதிர்கிறது

தொட்டாலே உதிர்கிறது

மநீம கமல்கூட இதுகுறித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு. இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

சேகர்பாபு

சேகர்பாபு

இந்த விவகாரம் விஸ்வரூபமானதையடுத்து, திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் இதில் கவனம் செலுத்த தொடங்கியது.. நேற்றுகூட ஊரகத் தொழில் துறை மற்றும் குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம் பகுதிக்கு வந்து கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர்... அப்போது ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினர்.

 வேண்டுகோள்

வேண்டுகோள்

பிறகு செய்தியாளர்களிடம் அன்பரசன் பேசும்போது, "பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கழிவுநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் சரி செய்து இந்த குடியிருப்பை ஆடி மாதம் முடிந்த பிறகு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்.. ஆனால் அதற்குள் சிலர் இந்த கட்டிடத்தில் குடியேறி விட்டனர்.. இப்போது இந்த கட்டிடம் சம்பந்தமாக ஐஐடி ஆய்வு செய்ய பரிந்துரை செய்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய்த பிறகு அவர்கள் கொடுக்கும் கட்டிடத்தின் தன்மை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 அதிமுக

அதிமுக

இந்நிலையில், புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டிடம் குறித்து பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது... எழும்பூர் திமுக எம்எல்ஏ பரந்தாமன் பேரவையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தரமற்று இருப்பதாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அடிப்படையாக வைத்து இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து பரந்தாமன் பேசும்போது, புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டிடம் மிக வேகமாக கட்டப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

எழும்பூர்

எழும்பூர்

புளியந்தோப்பு குடியிருப்பு தொடர்பாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கே.பி. பூங்காவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது... குடியிருப்பு தரமற்ற முறையில் காட்டப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் எழுந்துள்ளதால் இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அதிமுக

அதிமுக

இந்த கட்டிடம் 2018 இல் தொடங்கப்பட்டு 2019-ல் முடிக்கப்பட்டது. தொட்டால் சினிங்கி பார்த்திருக்கிறோம் ஆனால் தொட்டாலே விழுகின்ற கட்டிடத்தை கண்டுபிடித்த ஆட்சி, கடந்த அதிமுக ஆட்சி... கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டி முடித்த அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

ஒப்பந்தக்காரர்

ஒப்பந்தக்காரர்

இந்த கட்டிடங்களை கட்டிய ஒப்பந்ததாரர்களை கண்டுபிடித்து அவர்கள் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடம் கட்டிமுடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அன்பரசன்

அன்பரசன்

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பரசன், கே.பி. பார்கில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மிகவும் மோசமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரி உள்ளார். 2016 ஆம் ஆண்டு அதிமுக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 112.60 கோடி செலவில் 850 குடியிருப்புகள் கட்டப்பட்ட 2020 மே மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரை கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தன. அடையாளம் தெரியாத நபர்களால் குடிநீர், கழிவு நீர் குழாய்க்குள் சேதமடைந்து உள்ளதை அறிந்து பழுது நீக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது.

உறுதி தன்மை

உறுதி தன்மை

கடந்த வாரம் பெய்த மழையால் கட்டிடம் சேதமடைந்துள்ளது. தரம் மற்றும் உறுதி தன்மையை அறிய நேற்று நானும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்து ஏற்கனவே இந்திய தொழில் நுட்ப கழகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஐஐடி அறிக்கை அளித்ததும், தவறு கண்டறியப்பட்டால் ஒப்பந்ததாரர், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+