சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை காமராஜர் சாலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்த உதயநிதி ஸ்டாலின்.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உதவிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Recommended Video

    விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்த Udhayanidhi Stalin

    கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து குறைந்து பல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனாலும். அலட்சியம், அஜாக்கிரதை காரணமாக விபத்துகள் ஏற்படுவது நடக்கிறது.

    கருப்பு பூஞ்சை.. கவனமாக இருக்க சொல்லும் சுகாதாரத்துறை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! கருப்பு பூஞ்சை.. கவனமாக இருக்க சொல்லும் சுகாதாரத்துறை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று ஒரு விபத்து நடந்தது. விபத்தில் சிக்கிய இரண்டுபேர் காயம் அடைந்தனர், அவர்களை மீட்டு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சிகிச்கைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

    விபத்தில் சிக்கினார்

    விபத்தில் சிக்கினார்

    சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த செம்மஞ்சேரியைச் சேர்ந்த ராணி என்பவரது உடலை காமராஜர் சாலை வழியாக அமரர் ஊர்தியில் நேற்று எடுத்துச் சென்றுள்ளனர்.

    உதயநிதி பார்த்தார்

    உதயநிதி பார்த்தார்

    அப்போது அமரர் ஊர்திக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று, அமரர் ஊர்தியை முந்திச் செல்ல முயன்ற போது விபத்துக்குள்ளானது. விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவரும், பின்னால் அமர்ந்து வந்தவரும் காயம் அடைந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், வாகனத்தை நிறுத்தி என்னவென்று பார்த்தார்.

    மருத்துவமனையில் சேர்ப்பு

    மருத்துவமனையில் சேர்ப்பு

    விபத்தில் சிக்கியவரை கொண்டு செல்ல உதயநிதி ஸ்டாலின், ஆம்புலன்ஸ் வாகனத்தை உடனடியாக வரவழைத்தார். ஆம்புலன்ஸ் வாகனம் வந்த உடன், அதி விபத்தில் சிக்கி அடிபட்டவர்களை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    வேறு ஊர்தி

    வேறு ஊர்தி

    அதேநேரம் விபத்தில் சிக்கிய அமரர் ஊர்தியில் இருந்த பெண் சடலத்தை மற்றொரு அமரர் ஊர்தி வரவழைத்து எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் திருவொற்றியூரைச் சேர்ந்த சுங்கத் துறையில் வேலை பார்க்கும் பிரேம்நாத் என்பதும், பின்னால் அமர்ந்து வந்தவர் பிரேம் நாத்தின் உறவினரான சுரேஷ் என்பதும் தெரியவந்த நிலையில் விபத்து தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களின் நலன் குறித்து விசாரித்து உதவிய சேப்பேக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    English summary
    chennai: accident victims while trying to overtake ambulance vehicle, rescued by DMK MLA Udhayanidhi Stalin at Chennai Marina Beach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X