சர்பிரைஸ் கொடுத்த மின் ஊழியர்கள்.. நம்ம EBயா இது! மின்னல் வேக சேவை -திமுக எம்பியே ஷேர் பண்ணிருக்காரு
சென்னை: மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புகார் உள்ள நிலையில், மின்வாரிய ஊழியர்கள் துரித நடவடிக்கையை குறிப்பிட்டு ஒருவர் வெளியிட்டு இருக்கும் பதிவை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா பகிர்ந்து உள்ளார்.
விஸ்வா என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளதாவது, "வழக்கமாய் தமிழ்நாட்டு மின்சார துறை பற்றி பலர் குறை சொல்கிற பொழுது எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை.. "அவங்க நம்ம சொல்லுறத கேக்கவே மாட்டாங்க... போனே எடுக்க மாட்டாங்க..." என்பது தான். எங்களது வீட்டில் நேற்றைய இரவில் இருந்து குறைந்த மின்னழுத்த பிரச்சனை இருந்தது. இரவு மிகவும் தாமதமாகிவிட்டதால் நாளை காலை பார்த்து கொள்ளலாமென இருந்துவிட்டேன்.

காலை 3 மணி போல மின்னழுத்தம் சுத்தமாக குறைந்துபோய் ஒரு கட்டத்திற்கு மேல் மின்சார வரவு நின்றுபோய்விட்டது. தூக்கம் வராத காரணத்தால் கைபேசியில் சமூக ஊடங்களை பார்த்தபடி நேரத்தை போக்கினேன். 6 மணிக்கு கூகிள் தேடுதல் தளத்தில் பெருங்களத்தூர் மின்சார வாரிய அலுவலக தொலைபேசி எண்ணை தேடி கண்டுபிடித்து அழைத்தேன். சரி ரொம்ப சீக்கிரமாக அழைக்கிறோமோ என்று யோசனையில் இருந்த பொழுது அழைப்பை எடுத்தார்கள்.
இதுதான் பிரச்சனை சொன்ன பொழுது சரி பார்க்க சொல்கிறேன் என சொல்லிவிட்டு வைத்துவிட்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து அக்கம் பக்கத்து வீடுகளில் மின்சார வரவு தடையில்லாமல் இருப்பதை கண்டு சரி நம்ம வீட்டில் தான் பிரச்சனை போல முடிவெடுத்து X தளத்தில் (ட்விட்டர்) தமிழ் நாட்டு மின்சார வாரியத்தின் முகவரியை கண்டுபிடித்து அவர்களுக்கு தகவல் சொன்னேன். அப்பொழுது நேரம் 6.43. சரி பதில் கிடைக்க நேரமாகும் போல என நினைத்து கொண்டு இருக்கையில் 6.46 மணிக்கே அவர்களிடம் இருந்து பதில் வந்தது.
நேரடியாக விவரங்களை பகிரும் படி கேட்டுகொண்டார்கள். 7 மணி போல விவரங்களை பகிர்ந்தேன். 7.16 மணிக்கு எங்களது அலுவலக ஆட்களுக்கு விவரங்களை பகிர்ந்துவிட்டோம். சீக்கிரத்தில் அவர்கள் உங்களது பிரச்சனையை வந்து சரி பார்ப்பார்கள் என சொன்னார்கள். சரி வழக்கமாய் சொல்வது என இருந்துவிட்டேன். செய்திதாள் வாங்க பெருங்களத்தூர் தொடருந்து (ரயில்) நிலையம் அருகே இருக்கும் கடைக்கு போயிட்டு அப்படியே பெருங்களத்தூர் பாலத்தின் கீழ் நின்று காற்று வாங்கிவிட்டு வந்தேன்.
8 மணி போல மின்சார வாரியத்தில் இருந்து ஊழியர்கள் வந்து பார்த்துவிட்டு போனதாக அப்பா சொன்னார். வீட்டில் இருக்கும் மின்சார இணைப்பு கம்பியில்தான் பிரச்சனை. கம்பி வாங்கிவிட்டு சொல்லுங்கள் என சொன்னார்கள். எப்பொழுது எங்களது வீட்டில் மின்சார பொருட்கள் பழுதடைந்தால் சரி செய்து தரும் அண்ணாவிடம் சொல்லி இருக்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அரசு துறையில் வேலை பார்க்கும் மக்கள் நேரம் காலம் பார்க்காமல் சேவை செய்ய தயாராக தான் இருக்கிறார்கள். செய்தும் கொண்டு இருக்கிறார்கள்.
சொல்ல வேண்டிய இடத்தில் பிரச்சனை சொல்ல வேண்டும். முக்கியமாக அவர்கள் இத்தனை நேரம் ஆகும் என சொன்னால் அது வரைக்கும் நாம் காத்திருக்க தான் வேண்டும். அதனை விட்டுவிட்டு சமூக ஊடகத்தில் வந்து புரட்சி பேசி கொண்டு இருக்க கூடாது. குறிப்பு - மின்சார வாரிய ஊழியர்களுக்கு நன்றி. நீங்கள் மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் என்ன பிரச்சனை என்றே தெரியாமல் உட்கார்ந்து கொண்டு இருப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார். இப்பதிவை திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா பகிர்ந்து உள்ளார்.
-
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
மகேந்திரன் சொன்ன தமிழக மின்சார நெருக்கடி.. 6 மாசம் கரண்ட் கட் இருந்தா என்ன? பிரபல நடிகர் விளக்கம் -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!











Click it and Unblock the Notifications