டெல்லி கலவரம்.. யார் ராஜினாமா செய்யணும்?.. உங்க அர்ஜுனனா? கிருஷ்ணனா?.. ரஜினிக்கு திமுக எம்பி கேள்வி
சென்னை: டெல்லி வன்முறைக்கு ராஜினாமா செய்ய வேண்டும் என கூறும் ரஜினிகாந்த் யார் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுவதற்கு தைரியம் இருக்கிறதா என திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் நிலையில் ஜாபர்பாத், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடந்தது. இந்த கலவரத்தால் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறையின் போது செய்தியாளர்கள், அப்பாவி மக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
டெல்லி வன்முறைக்கு ராஜினாமா பண்ணிட்டு போங்கன்னு சொல்லிட்டீங்க @rajinikanth Sir
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) February 28, 2020
ஆனா யாரு ராஜினாமா செய்யனும் என்று தைரியம் இருந்தால் சொல்லுங்க
-உங்க அர்ஜுனா கிருஷ்ணவா
-இல்ல CAAக்கு வாக்கு அளித்த அதிமுக அரசா
- பாமக நிறுவனர் @drramadoss ஆ
- இல்ல நீங்க பொய் சாக்கு சொல்லும் ஊடகம் ஆ pic.twitter.com/da00RO2wcZ
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்காக விமான நிலையத்துக்கு சென்ற போது அவர் போயஸ் தோட்ட இல்லத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்த போது டெல்லியில் நடைபெற்ற வன்முறை கலவரத்திற்கு உளவுத் துறையின் தோல்வியே காரணம். டெல்லி கலவரத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும்.
இந்த வன்முறையை வன்மையாக கண்டிக்கிறேன். இது ரொம்ப டூ மச்சாக போய் கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாகிவிட்டதால் அதை மத்திய அரசு திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனவே மக்கள் போராட்டம் நடத்துவதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என ரஜினிகாந்த் வாய் திறந்து தனது கருத்துகளை தெரிவித்தார்.
மேலும் டெல்லியில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள் என ரஜினி ஆவேசமாக கூறியிருந்தார். ஆனால் யாரை அவர் ராஜினாமா செய்ய சொல்கிறார் என்பது கேள்வியாக இருக்கிறது. மத்திய அரசையா, டெல்லி அரசையா, உள்துறை அமைச்சரையா என்ற கேள்வி பலருக்கு எழுந்தது. இதே கேள்வி தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாருக்கும் எழுந்துள்ளது.
இதுகுறித்து திமுக எம்பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் டெல்லி வன்முறைக்கு ராஜினாமா பண்ணிட்டு போங்கன்னு சொல்லிட்டீங்க @rajinikanth Sir
ஆனா யாரு ராஜினாமா செய்யணும் என்று தைரியம் இருந்தால் சொல்லுங்க.
-உங்க அர்ஜுனனா கிருஷ்ணாவா
-இல்ல CAAக்கு வாக்கு அளித்த அதிமுக அரசா
- பாமக நிறுவனர் @drramadoss ஆ
- இல்ல நீங்க பொய் சாக்கு சொல்லும் ஊடகமா
என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications