ஹிஸ்டரிலயே இல்ல.. ஒரே நாளில் 2 அவைகளிலும் மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றம்.. திருச்சி சிவா தாக்கு!
சென்னை: மணிப்பூர் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் கவலைப்பட்டதில்லை, நாடாளுமன்றம் வந்து அலுவலகத்தில் இருக்கும் பிரதமர் அவைக்கு வர மறுக்கிறார் என திமுக எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக நடைபெறவில்லை. மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அமளி ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள். கடைசி 3 நாட்களில் இதுதொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அப்போதும் சில நிமிடங்கள் மட்டுமே மணிப்பூர் பற்றிப் பேசினார்.
இந்நிலையில், திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா, "மணிப்பூர் மாநிலத்தில் 100 நாட்களுக்கும் மேலாக பதட்டம் நிலவுகிறது. 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றுவந்ததால் மணிப்பூர் பிரச்னை முடிந்துவிட்டதுபோல் மத்திய அரசு கூறுகிறது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் விளக்கம் தேவை என்பதே எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசினார். ஆடைகளின்றி பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது பற்றி அவர் விளக்கம் அளிக்கவில்லை. மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் கவலைப்பட்டதில்லை. நாடாளுமன்றம் வந்து அலுவலகத்தில் இருக்கும் பிரதமர் அவைக்கு வர மறுக்கிறார்.
மணிப்பூரில் தற்போதும் வன்முறை நடக்கிறது. அதில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கேள்வி கேட்கும் திமுக உறுப்பினர்கள் மீது குறிவைக்கின்றனர். அரசு என்ன செய்தது என்று பேசாமல், அதற்கு பதிலாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை முடக்குகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அவசர கதியில் 25 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய பாஜக அரசு 42 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. பல்வேறு சட்டங்களின் பெயர்களை மாற்றியுள்ளது. மசோதாக்களின் பெயர்களையும் மக்களுக்கு புரியாத வகையில் மாற்றியுள்ளனர். இதன் பொருள் பாமரனுக்கு எப்படி புரியும்?
பாதகமான மசோதாக்களை 3 நிமிடங்களில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. விவாதம் நடத்தாமல் மசோதாக்களை நிறைவேற்றுகிறது பாஜக அரசு. மக்களவை, மாநிலங்களவைகளில் ஒரு சட்டம் ஒரே நாளில் நிறைவேறிய வரலாறு கிடையாது. ஆனால், எந்த விவாதமும் நடத்தாமல் பாஜகவினர் நிறைவேற்றியுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒற்றை முயற்சியால் தமிழ்நாட்டில் அத்தனை இடங்களில் வெல்ல முடிந்தது. இந்த நிலையை இந்தியா முழுவதும் ஏற்படுத்த முடியும். தமிழ்நாட்டில் அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியாது என்பதைக் கடந்த காலத்தில் நிரூபித்துள்ளோம். மத்திய பாஜக அரசை அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
'இந்தியா' கூட்டணி பெயரை கேட்டாலே பாஜக அரசுக்கு கோபம் வருகிறது. மாநிலக் கட்சியான திமுக மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விமர்சனம் வைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அச்சம் இங்குதான் உள்ளது." என விமர்சித்துள்ளார் திருச்சி சிவா.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம்












Click it and Unblock the Notifications