FCRA சட்டத்திருத்த மசோதவை திரும்ப பெறனும்.. ஜூன் 28-ல் நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டம்.. திமுக எம்பி வில்சன்
சென்னை: மத்திய அரசின் வெளிநாட்டு நிதி உதவி சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, வரும் ஜூன் 28 ஆம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டமான Foreign Contribution Regulation Act (FCRA) திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை (NGO) குறிவைத்து இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்த மசோதா ஏப்ரல் 2026 தொடக்கத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதியுதவி (FCRA ) திருத்தச்சட்டம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையில் நேற்று இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 150க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது இந்தச் சட்டத்திருத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் பேசிய வில்சன், "இந்த மசோதா ஜனநாயகத்தின் அடிப்படைகளையே அச்சுறுத்துகிறது. மேலும், இது தன்னார்வ அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாட்டை கடுமையாகப் பாதிக்கும். இதனால் ஏழை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்குக் கிடைக்கும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படக்கூடும்," என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக கருத்தரங்கில், எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் ஜூன் மாதம் 28 ஆம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications