உடனே ரெடி ஆகுங்க! லிஸ்ட் அனுப்புங்க! உளவுத்துறைக்கு உத்தரவிட்ட ஸ்டாலின்! களமிறங்கிய அதிகாரிகள்! ஏன்?
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆரம்பகட்ட பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ளார். கடந்தகால சர்ச்சைகளைத் தவிர்க்கும் நோக்கில் திமுக புதிய இறுக்கமான தேர்வு முறையை வகுக்க உள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பாக ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று குழுக்கள் வேட்பாளர்களைப் பரிந்துரைத்தன. பின், இறுதிப் பட்டியலில் லஞ்சம், செல்வாக்கு பங்காற்றியதாகப் பரவலான புகார்கள் எழுந்தன. அதாவது வேட்பாளர்களை தேர்வு செய்து அந்த லிஸ்டை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுக்க.. வேட்பாளர்களிடம் அந்த குழுக்கள் பணம் வாங்கியதாக புகார்கள் வைக்கப்பட்டது. தகுதி, களப்பணிப் புகழ் புறக்கணிக்கப்பட்டதாகப் பல கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். ஸ்டாலின் இதை விரும்பவில்லை.

ஸ்டாலின் வைக்கும் பெரிய பிளான்
முந்தைய அனுபவப் பாடம் கற்று, 2026 தேர்தல் வேட்பாளர்களுக்கு திமுக தலைமை பல அடுக்கு தேர்வு முறையைத் திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தரவு அடிப்படையிலான, ரகசியமான, தனிநபர் பரிந்துரைகளை சாராத செயல்முறையை இந்த முறை விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது காசு கொடுத்துவிட்டு.. வேட்பாளர்களை தேர்வு செய்ய கூடாது என்று ஸ்டாலின் உறுதியாக உள்ளாராம்.
இப்புதிய திட்டப்படி, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மூன்று சாத்தியமான வேட்பாளர்களின் பட்டியலை மாநில உளவுத்துறை தயாரிக்கும். இதற்கான உத்தரவை அவர் ஏற்கனவே உளவுத்துறைக்கு போட்டுவிட்டாராம். உள்ளூர் செல்வாக்கு, பொது பிம்பம், கடந்தகால தேர்தல் செயல்பாடு, தொண்டர்களைத் திரட்டும் திறன், வாக்காளர்களை கவரும் திறன் போன்ற தகவல்கள் அடிப்படையில் இந்த லிஸ்ட் தயார் செய்யப்படும்.
அதேவேளையில், அரசியல் மதிப்பீடு, தேர்தல் வியூகங்களை கையாளும் 'PEN' குழு, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களுடன் மற்றொரு பட்டியலை உருவாக்கும். இக்குழு மாவட்ட அலகுகள், வாக்குச்சாவடி முகவர்கள், அரசியல் போக்குகளைக் கண்காணிக்கும் மூத்த பார்வையாளர்களிடமிருந்து அறிக்கைகளைச் சேகரிக்கும்.
களமிறங்கும் சர்வதேச அமைப்பு
இந்த இரு பட்டியல்களுக்கு அப்பால், தேர்தல் வியூகம், வாக்காளர் பகுப்பாய்வுடன் தொடர்புடைய இன்னொரு சர்வதேச அமைப்பொன்றும், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களைக் கண்டறியும். இக்குழு கருத்துக்கணிப்புகள், வாக்காளர் பின்னூட்டம், தொகுதி தரவுகளை நம்பி வெற்றி வாய்ப்பை மதிப்பிடும்.
மூன்று பட்டியல்களும் தயாரானதும், அவை தொகுதி வாரியாக ஒப்பிடப்படும். அவை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கபடும். பட்டியல்களில் மீண்டும் மீண்டும் தோன்றும், அதிக வெற்றி வாய்ப்புள்ள நபர் வலுவான நபராக கருதப்பட்டு ஸ்டாலின் மூலம் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார். மூன்று லிஸ்டிலும் இடம்பெற்ற நபர்களில் யாருக்கு சாதகமாக அந்த தொகுதி இருக்கிறதோ அவர் வேட்பாளாரக தேர்வு செய்யப்படுவார்.
கட்சி உள்வட்டாரத் தகவலின்படி, இம்முறை முக்கியக் கவனம் வெற்றி வாய்ப்பு மீதுதான், வயது மூப்பு, நீண்ட கால உறுப்பினர் அல்லது தனிப்பட்ட விசுவாசம் மீது அல்ல. வெற்றி பெறுபவர்களைத்தான் உறுதியாக களமிறக்க வேண்டும் என்று ஸ்டாலின் திட்டவட்டமாக இருக்கிறார். 2026-ல் நம்பிக்கையுடன் இடங்களை வெல்லக்கூடிய வேட்பாளர்களைக் களமிறக்க உதவும் என தலைமை நம்புகிறது.
இச்செயல்முறை இந்த மாதமே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு களத்தில் தங்கள் இருப்பை வலுப்படுத்தவும், உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் போதுமான அவகாசத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
-
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி












Click it and Unblock the Notifications