வென்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.. கும்மிடிப்பூண்டி சிறுமி வழக்கு.. விஜய்க்கு உதயநிதி வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, போதை பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப் பெண்கள் அதிரடி படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்சி ஆட்களை பர்சேஸ் செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும் என்று உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.

சட்டம் ஒழுங்கு வென்டிலேட்டரில்
வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார். சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை.
முதலமைச்சர் அக்கறை
இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை. அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.
போராட்டத்தில் இறங்குவோம்
தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும். இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது" என்று கூறியுள்ளார்.
-
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications