சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண்கள் சென்டிமென்ட்.. கேட்ச் செய்த திமுக.. பாயிண்ட் டூ பாயிண்ட் வைக்கும் புதிய தேர்தல் விளம்பரம்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசின் சாதனைகளைப் பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் வகையில் திமுக பிரசார வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வரும் சனிக்கிழமை (பிப். 19) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 4இல் மேயர், நகரமன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை கடனாளி ஆக்கிய திமுக.. ஆட்சிக்கு வந்து 100 ரூபாய் கூட தரவில்லை.. பிரச்சாரத்தில் ஓபிஎஸ் ஆவேசம் மக்களை கடனாளி ஆக்கிய திமுக.. ஆட்சிக்கு வந்து 100 ரூபாய் கூட தரவில்லை.. பிரச்சாரத்தில் ஓபிஎஸ் ஆவேசம்

 திமுக கூட்டணி

திமுக கூட்டணி

இந்தத் தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரைக் கடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் இருந்த அதே கூட்டணி தொடர்கிறது. அதேநேரம் மற்ற கட்சிகள் தனித்தே தேர்தலில் களமிறங்குகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து பயணித்து வந்த அதிமுக, பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாக களமிறங்குகின்றன. இது தவிர பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன.

திட்டம்

திட்டம்

ஆளும் தரப்பைத் தவிர மற்ற தரப்பினர் தனித்தனியாகக் களமிறங்குவதால் இது திமுக கூட்டணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும் என அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் கடந்த 9 மாத திமுக அரசு பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் இது அதிமுகவுக்குச் சாதகமாக இருக்கும் என அக்கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நீட் விவகாரம், பொங்கல் தொகுப்பு தரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து அதிமுக தரப்பு பிரசாரம் செய்து வருகிறது.

 வீடியோ பிரசாரம்

வீடியோ பிரசாரம்

இது தவிர, கடந்த சட்டசபைத் தேர்தல் பரப்புரையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது. அதற்கான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவராத நிலையில், அதை முன்னிறுத்தியும் அதிமுக சாடி வருகிறது. இதற்குப் பதிலடி தரும் வகையிலான பிரசாரங்களை திமுக தலைவர்கள் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், திமுக அரசின் சாதனைகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் திமுக பிரசார வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

 பெண்கள் சென்டிமென்ட்

பெண்கள் சென்டிமென்ட்

சமீபத்தில் தான் தமிழக அறநிலையத் துறையின் செயல்பாடுகளை விளக்கி வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது புதிய பிரசார வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெண் வாக்காளர்களைக் குறிவைத்து திமுக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசம் என்பது எந்தளவுக்குப் பயன் தருகிறது என்பதைச் சித்தரிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. திமுக ஐடி விங் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 என்ன வீடியோ

என்ன வீடியோ

கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று மாநகர பேருந்துகளில் இலவச பயணம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது பெரியளவில் பயன் தரும் என்று இதைப் பிரசாரம் செய்தது. சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்ததும் முதல்வர் ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று. இதற்குப் பெண்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாக திமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில், இந்த பிரசார வீடியோவும் அதை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டு உள்ளது.

English summary
DMK's plan to gain support among women voters in urban local body election: DMK's video campaign in Tamilnadu urban local body election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X