திமுகவின் மாஸ்டர் மைண்ட்...அதிமுக கோட்டைகளை சல்லி சல்லியாக நொறுக்கிய அமைச்சர்கள்... முதல்வர் ஹேப்பி
அதிமுகவின் கோட்டைகளில் ஓட்டை போட்டு சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளது திமுக இதற்கு மாஸ்டர் மைன்ட் ஆக செயல்பட்டுள்ளனர் சில அமைச்சர்கள்.
சென்னை: நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் பெரும்பான்மையான வார்டுகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றாலும் கோவை, சேலத்தில் திமுகவின் கொடி பறப்பது முதல்வர் மு.க ஸ்டாலினை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கிறது. இதற்கு மாஸ்டர் மைண்ட் ஆக செயல்பட்ட அமைச்சர்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறதாம்.
வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வரவர திமுக முகாமில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாயின. 90 சதவிகித வெற்றி அறிவிப்புகள் வந்த பிறகு அறிவாலயத்தில் தொண்டர்கள் மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின் இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தவர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி கூறினார்.
மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை வரலாற்றில் பதிவாகக் கூடிய சாதனைகளை செய்திருக்கிறோம் இன்னும் செய்யப்போகிறோம் என்று கூறினார். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கக் கூடிய அங்கீகாரம் இது என்று கூறினார்

மாபெரும் வெற்றிக்குக் காரணம்
இந்த வெற்றிக்கு மகத்தான காரணம் மதசார்பற்ற கூட்டணிதான் என்று கூறினார். இது தேர்தலுக்கான கூட்டணி மட்டுமல்ல கொள்கை அளவில் இணைந்த காரணத்தினால்தான் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்றார். நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். கூட்டணி கட்சித்தலைவர்களின் தொடர் பிரச்சாரமும் ஒத்துழைப்பும்தான் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்றார் ஸ்டாலின்.

கொங்கு மண்டலம்
9 மாத காலமாக மக்களுக்கு பணியாற்றியதன் காரணமாகவே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது என்று கூறிய ஸ்டாலின், அதிமுகவின் கோட்டை என்று சொல்லிக்கொண்டிருக்கிற கொங்கு மண்டலத்தையே இன்றைக்கு கைப்பற்றியிருக்கிறோம் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது மு.க ஸ்டாலின் முகத்தில் பெருமிதமும் பூரிப்பும் தெரிந்தது.

கே.என். நேரு
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மாபெரும் வெற்றியை பரிசளித்திருக்கிறார்கள் அவரது நம்பிக்கைக்கு உரிய தளபதிகள். தேர்தல் நாளிலேயே இந்த வெற்றியை கணித்தவர் கே.என்.நேருதான். கோவையில் இந்த முறை நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கைப்பற்றும் என்று உறுதியாக சொன்னார்.

சேலத்திலும் சாதனை
அதே போல தமிழக அரசு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்துத் தான் இந்த முறை நாங்கள் வாக்கு சேகரித்தோம். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி திருச்சியில் மட்டுமல்ல. சேலத்திலும் கூட வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என்று சில தினங்களுக்கு முன்பே கூறியது போலவே பிரம்மாண்ட வெற்றி கிடைத்துள்ளது.

அதிமுகவின் கோட்டைகளை தகர்த்த அமைச்சர்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட, கோவை மாநகராட்சி மற்றும் அம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜியின் பங்கு முக்கியமானது என்பதை திமுகவில் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே செந்தில் பாலாஜி கோவையிலேயே முகாமிட்டு பல வியூகங்களை வகுத்து மிகப்பிரம்மாண்டமான வெற்றியை முதல்வருக்கு பரிசளித்துள்ளார்.
Recommended Video

மிகப்பெரிய பரிசு
அதே போல, சேலம் மாநகராட்சியையும் அம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளையும் குறிப்பாக இபிஎஸ் சொந்த தொகுதியான நகராட்சியை திமுக கைப்பற்றியது முதல்வருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாம். இந்த வெற்றியும் திமுகவுக்கு புது உற்சாகத்தை அளித்திருக்கிறது. திமுகவில் மாஸ்டர் மைன்ட் ஆக செயல்பட்ட அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக அண்ணா அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications