மீண்டும் சர்ச்சையில் திமுக பேச்சாளர்.. பெண்களை இழிவுபடுத்துவதா? கண்கலங்கிய குஷ்பு.. ஆவேசமாக பேட்டி
சென்னை: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் குறித்து இழிவாக பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் எனவும் பெண்கள் குறித்து இழிவாக பேசுவதை முதல்வர் அனுமதிக்கக் கூடாது எனவும் குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அக்கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி, பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி கிருஷ்ண மூர்த்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு அடங்கிய வீடியோவை பதிவிட்டு கடும் கண்டனத்தை பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்கள் எங்கேயும் இழிவாக பேசுவதில்லை. பெண்களை இழிவாக பேசுபவர்கள் உங்கள் தாயின் வளர்ப்பை இழிவுபடுத்துவதாகத்தான் அர்த்தம். திமுகவின் தாய் தந்தையாக கருணாநிதி இருக்கிறார். திமுகவினரின் இத்தகைய பேச்சு கருணாநிதியை இழிவுபடுத்துவது போல் உள்ளது. அது தெரியாமலே இவர்கள் ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும்.
பெண்களை அவதூறாக பேச உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? என் வீட்டில் நாளைக்கு 10 பேர் வந்து கல் வீசினாலும் எனக்கு அதைப்பற்றி கவலை கிடையாது. இதே மாதிரி ஏற்கனவே கல் வீசியிருக்கிறார்கள். எனவே அதை எப்படி சந்திக்க வேண்டும் என எனக்கு தெரியும். என்னை சீண்டி பார்க்காதீர்கள். தாங்க மாட்டீர்கள். பெண் என்றால் இவ்வளவு இழிவாக போய் விட்டதா உங்களுக்கு..
அரசியல் ரீதியாக பதில் கருத்தை தெரிவியுங்கள். நான் ஒவ்வொரு பெண்ணிற்காகவும் பேசுகிறேன். பெண்கள் பற்றி இழிவாக பேச யாருக்குமே தைரியம் வரக்கூடாது. வந்தால் திருப்பி அடிப்போம். பெண்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். யாரையும் நம்பி நான் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. என் திறமையை மட்டும் நம்பி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். என்னை சீண்டிப்பார்க்க வேண்டாம். எந்த இடத்தில் இருந்தாலும் சரி.. பெண்ணை இழிவாக பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்..
திமுகவில் இருந்து பாஜக உறுப்பினரை கேவலமாக பேசியதாக இது கிடையாது. திமுகவில் இருந்து ஒரு பெண் குறித்து அசிங்கமாக பேசியிருக்கிறார். கேவலமான வார்த்தைகளை மேடையில் பயன்படுத்தியுள்ளார். இது போன்ற நபர்களை முட்டிக்கு முட்டி தட்டினால் தான் புத்தி வரும். இல்லையென்றால் புத்தி வராது. கருணாநிதி திமுகவிற்கும் - தற்போதைய திமுகவிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இதுதான் திராவிட மாடலா? " என ஆவேசமாக குஷ்பு பேட்டி அளித்தார். பேட்டிக்கு இடையே குஷ்பு கண்கலங்கவும் செய்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications