சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’ஆர்வக் கோளாறு’ நடுவானில் திறந்த எமர்ஜென்சி கதவு! உருட்டாமல் இருந்தால் சரி! செந்தில் பாலாஜி அட்டாக்!

Google Oneindia Tamil News

சென்னை : பறக்கும் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுதந்திர காற்றை சுவாசிக்க, விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி என தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதற்கு பிறகு திமுக மற்றும் அதன் அமைச்சர்களை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் அவ்வப்போது ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறார்.

குறிப்பாக கரூரைச் சேர்ந்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை அண்ணாமலை சுமத்தி வந்த நிலையில் ரபேல் வாட்ச் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அடிதூள்! தமிழ்நாடு மொத்தத்திற்கும் குட்நியூஸ்.. சட்டசபையிலேயே அறிவித்த செந்தில் பாலாஜி! மாஸ் திட்டம் அடிதூள்! தமிழ்நாடு மொத்தத்திற்கும் குட்நியூஸ்.. சட்டசபையிலேயே அறிவித்த செந்தில் பாலாஜி! மாஸ் திட்டம்

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் தான் தற்போது அனைத்து செய்திகளிலும் சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்து இருக்கிறது. அந்த வாட்சின் விலை கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. முதன்முறையாக இது குறித்து திமுக அமைச்சரான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில் அது தொடர்பாக பதில் அளித்த அண்ணாமலை இது ரஃபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது என பதிலளித்தார். இது தொடர்பாக வாட்சின் ரசீதையும் கேட்டு வருகின்றனர் திமுகவினர்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இதற்கிடையே புது குற்றச்சாட்டை முன் வைத்தார் செந்தில் பாலாஜி. ஆனால் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாகவே பேசியிருந்தார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர்," கடந்த 10 ஆம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

இண்டிகோ விமானம்

இண்டிகோ விமானம்

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?" என பதிவிட்டிருந்தார். அந்த நபர் யார் என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்தது.

டிஜிசிஏ

டிஜிசிஏ

இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த விமானம் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6 இ 7339 விமானம் என்பதும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்றதாக தகவல் வெளியானது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகியும் பயணித்ததாக கூறிய நிலையில் திமுகவைச் சேர்ந்த சரவணன் அது பாஜக தேஜஸ்வி சூர்யா எனவும், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தவும் டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

கிண்டல் பதிவு

கிண்டல் பதிவு

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,"2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி." என பதிவிட்டுள்ளார்.

English summary
While it is reported that the DGCA has ordered an investigation into the opening of the emergency door of the flying plane, Tamil Nadu Minister Senthil Balaji has posted on Twitter that don sat the emergency door of the plane is opened for breathe free air.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X