அரசியலுக்காக.. பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது! திமுகவினர் வெளிநடப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தும், சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்று கூறி, சட்டமன்றத்திலிருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

வெளிநடப்பு குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தோம். இன்று எடுத்துக்கொள்கிறோம், நாளை எடுத்துக்கொள்கிறோம் என்று சபாநாயகர் காலம் தாமதித்தார்.

Parandur Airport dmk

இறுதியாக திங்கட்கிழமை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தார். ஆனால், சட்டமன்றம் தொடங்கிய உடன் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தவிட்டார். எனவே இதைப்பற்றி பேச எதுவும் இல்லை என்று கூறி சபாநாயகர் விவாதிக்க அனுமதி மறுத்துவிட்டார்" என்று கூறியிருக்கிறார்.

வேறு ஒரு இடத்திற்கு விமான நிலையத்தை மாற்றுவதாக சொல்கிறீர்கள். மாற்று இடத்திற்கான ஆய்வு எப்போது தொடங்கப்படும்? புதிய இடத்தில் விமான நிலையம் எனில்.. அந்த இடத்திலிருந்து எவ்வளவு மக்கள் வெளியேற்றப்படப்போகிறார்கள்? பரந்தூர் விமான நிலையத்தை கணக்கில் கொண்டு அங்கு மெட்ரோ ரயில் நிலைய வழித்தடம் அமைக்கப்பட்ட உள்ளது. சென்னை-பெங்களூர் விரைவு சாலையும் இந்த விமான நிலையத்தை கணக்கில் கொண்டுதான் அமைக்கப்படுகிறது.

இப்படியாக பல நன்மைகள் இருந்தும், அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த திட்டம் கைவிடப்படுகிறது. அதிமுக ஆட்சியில் துறைமுகத்திலிருந்து சாலை திட்டம் இப்படித்தான் கிடப்பில் போடப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை.. விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் சொல்லிவிட்டேன், தேர்தல் வாக்குறுதியில் சொல்லிவிட்டேன் என்று கூறி நிறுத்துவது ஏற்புடையதல்ல" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+