39 சீட்ஸ்.. இப்பவே லிஸ்ட் எடுங்க.. ஸ்டாலின் போடும் பட்டியல்.. உள்ளே வரப்போகும் புது முகம்.. அவங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான அடிப்படை பூர்வாங்க பணிகளை ஆளும் திமுக செய்ய தொடங்கி உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் திமுக சார்பாக பணிகள் செய்வதற்கு முன் ஒரு லிஸ்ட் எடுக்கப்பட்டு அந்த நபர்களின் செல்வாக்கை உளவுத்துறை மூலம் அறிய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

DMK Stalin is in High Speed Mode: The party is already planning to short list candidates for Lok Sabha 2024

சென்னையில் திமுக உயர் நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானமங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி சென்னையில் ஜூன் 3-ல் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடத்துவது. திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஜூன் 20-ல் திறப்பது. திருவாரூர் கலைஞர் கோட்டம்- நிதிஷ்குமார் திறந்து வைப்பது.

கிராமங்கள்தோறும் திமுக கொடி கம்பங்கள் அமைப்பது. தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி சிலைகள் அமைப்பது. தமிழ்நாடு முழுவதும் இணைய வசதியுடன் கலைஞர் படிப்பகங்கள் அமைப்பது போன்ற தீர்மானங்களை கொண்டு வந்தனர்.

தேர்தல்:

இந்த பணிகள் ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் திமுக தரப்பு லோக்சபா தேர்தலுக்கும் தயாராக உள்ளதாம். அதன்படி லோக்சபா தேர்தலுக்காக பூத் கமிட்டியை அமைக்க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த வாரம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூம் கால் மூலம் நடைபெற்றது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த மீட்டிங் நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க டார்கெட் வைத்துள்ளோம். இதில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். ஆனால் மீதி கிணறு இன்னும் தாண்டவில்லை.

17 மாவட்டங்களில் ஏன் இன்னும் பூத் கமிட்டியை அமைக்கவில்லை, கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை என்று கூறினார். 17 மாவட்டங்களில் என் செய்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு கடைசி வார்னிங். புதிய பூத் கமிட்டியை உடனே அமையுங்கள். அதோடு உடனே பூத் கமிட்டியை அமையுங்கள் என்று கூறி உள்ளார்.

லோக்சபா தேர்தலை மனதில் வைத்து ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கண்டிப்பு காட்டி உள்ளார்.

இதையடுத்து இன்னும் சில அமைச்சர்களிடம் கண்டிப்பாக பேசி ஸ்டாலின்.. அதன்பின் லோக்சபா தேர்தலுக்கு உட்கட்சி சர்வே எடுக்க வேண்டும்.எம்பிக்கள் செயல்பாடு எப்படி உள்ளது.. யாரை மீண்டும் நிற்க வைக்கலாம்.. புதியவர்கள் தேவையா.. ஏற்கனவே இருப்பவர்களை மீண்டும் களமிறக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம்.

39 சீட்ஸ்

தமிழ்நாட்டில் இருக்கும் 39 இடங்களில் அனைத்தையும் வெல்ல ஸ்டாலின் டார்கெட் விதித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதற்காக ஆளும் திமுக சார்பாக பணிகள் செய்வதற்கு முன் ஒரு லிஸ்ட் எடுக்கப்பட்டு அந்த நபர்களின் செல்வாக்கை உளவுத்துறை மூலம் அறிய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தற்போது இருக்கும் திமுக எம்பிக்கள் செயல்பாடு, மக்களுக்கு அவர்கள் மீது உள்ள நம்பிக்கை, ஆதரவு ஆகியவை பற்றி சர்வே எடுக்கப்படும். அதன்பின் அதை உளவுத்துறை ரிப்போர்ட்டாக கொடுக்கும்.

இதையடுத்து புதிதாக திமுக களமிறக்க வாய்ப்புள்ள நபர்களை பற்றிய லிஸ்டை எடுப்பார்கள். புதிதாக களமிறங்க வாய்ப்பு உள்ள ராஜிவ் காந்தி போன்ற திமுக இளம் தலைவர்களின் லிஸ்ட் சேகரிக்கப்படும்.

அதில் மீண்டும் உளவுத்துறை சார்பாக சர்வே நடத்தப்படும். இவர்கள் கொடுக்கும் லிஸ்டை வைத்து வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்படும் என்று ஆளும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+