தேர்தலுக்கு ரெடி.. சென்னையில் திரளும் திமுக நிர்வாகிகள்.. அக். 28 ஆம் தேதி பயிற்சி கூட்டம்!
சென்னை: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக நிர்வாகிகளுக்கு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி தேர்தல் பயிற்சி கூட்டம் நடைபெற உள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 28 செவ்வாய்கிழமை காலை 9 மணியளவில் மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் உள்ள 'கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில் திமுக பயிற்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. உறுப்பினர் சேர்க்கை, தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம், பூத் கமிட்டி கூட்டங்கள் என நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக நிர்வாகிகளுக்கு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி தேர்தல் பயிற்சி கூட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் திட்டமிடலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை கட்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட மத்திய பாஜக அரசின் முன்பு "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை திமுக தொடங்கவுள்ளது.
அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர், திமுக தலைவர் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முன்னெடுப்புக்காக கழக மாவட்ட செயலாளர்கள் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள்- தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் வரும் 28.10.2025 செவ்வாய்கிழமை காலை 9 மணி அளவில் மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications