"திமுக Vs பாஜக": இங்க ஒருத்தன் 10 நாளா கூவிகிட்டு இருக்கேனே, பதில் சொல்ல வக்கிருக்கா.. உதயநிதி சவால்
உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்
சென்னை: "இங்க ஒருத்தன் 10 நாட்களாக ஒரு செங்கல்லை வைத்து கொண்டு கூவிக்கிட்டு இருக்கேனே.. அதுக்கு பதில் சொல்ல மோடிக்கு வக்கில்லை.. நீங்க ஒரு பிரதமர் தானே? உங்களுக்கு தைரியம் இருந்தால், 10 பத்திரிகையாளர்களை சந்திக்க தைரியம் இருக்கா?" என்று உதயநிதி ஸ்டாலின் பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார்.
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் முகாமிட்டு திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பல இடங்களில் உதயநிதி, பாஜக தலைவர்களையே குறி வைத்து பேசினார்.. அதன் ஓரிரு வரிகள்தான் இவை:
"இங்க ஒருத்தன் 10 நாட்களாக செங்கல்லை வைத்து கொண்டு கூவி கொண்டிருக்கிறேன்.. அதுக்கு பதில் சொல்ல மோடிக்கு வக்கில்லை.. நீங்க ஒரு பிரதமர் தானே? உங்களுக்கு தைரியம் இருந்தால், 10 பத்திரிகையாளர்களை சந்திக்க தைரியம் இருக்கா? நான் என் சொத்தை அமித்ஷாவுக்கு எழுதி தருகிறேன்.. அமித்ஷா அவர் மகன் சொத்தை எனக்கு எழுதி தர தைரியம் இருக்கா?

ஜெயில்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, யாரெல்லாம் ஊழல் செய்தார்களே, அவர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போவது உறுதி.. ஆரம்பத்தில் கருத்துக்கணிப்பில் திமுக 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சொன்னார்கள்.. ஆனால், மோடி இங்கே பிரச்சாரத்துக்கு வந்தார் இல்லையா, அவர் பிரசாரம் செய்த பிறகு 180 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக
எப்படி எம்பி தேர்தலில் ஓட ஓட பாஜகவை தோற்கடித்தோமோ, அதே மாதிரி அதிமுக - பாஜக இந்த முறையும் மதவாத சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும்... நம்மை எதிர்த்து நிற்பது மோடி.. ஆனால் நம்ம பக்கம் நிற்பது கலைஞர்... இந்த தேர்தல் மோடிக்கும், கலைஞருக்குமான தேர்தல்... இதில் கலைஞரை வெற்றி வெற்றி பெற வைக்க வேண்டும்" என்றார்.

அமித்ஷா
உதயநிதிதான் இப்படி பேசி வருகிறார் என்று பார்த்தால், தமிழகம் வந்துள்ள அமித்ஷாவும் உதயநிதியையே குறி வைத்து பேசி கொண்டிருக்கிறார்.. இன்றுகூட நெல்லையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு திரட்டும்போது அமித்ஷா பேசியது இதுதான்:

ஸ்டாலின்
பிரதமர் மோடி விவசாயிகள், மீனவர்கள். மக்கள் நலன் இப்படி எல்லாவற்றையும் பற்றி யோசிக்கிறார்.. ஆனால், ஸ்டாலினோ தன் பையனை பற்றி மட்டுமே கவலைப்படறார்.. எப்படியாவது தன் மகனை முதல்வராக்குவது பற்றியே யோசிக்கிறார்... ஒரு மாநிலத்தை பற்றி சிந்திப்பவர்களுக்கு ஆதரவு தரணுமா? இல்லாட்டி மகனை முதல்வர் ஆக்க நினைக்கும் நபருக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? இதை நீங்கதான் முடிவு செய்யணும்.

பாஜக
நான் உதயநிதியை பத்தி பேசும்போதெல்லாம், ஸ்டாலின் கோபப்படுகிறார்.. அவருக்கு பிபி எகிறுது.. உடனே மனஅமைதி இழந்துடறார்.. அதனால், யாரை பற்றியாவது எதையாவது பேசறார். இறந்து போன தலைவர்களை பற்றி கூட ஸ்டாலின் விமர்சிக்கிறார்... ஆனால், பிரதமர் மோடியும் சரி, பாஜகவும் சரி, அதிமுகவும் சரி, தலித்துகளின் எண்ணங்களை புரிந்து கொள்கிறார்கள்... தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு தலைவரை நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்ததே பாஜகதான்.. கட்சியின் இந்த மாநிலத் தலைவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்" என்றார்.

ஸ்டாலின்
வழக்கமாக தேர்தல் என்றால், அதிமுகவும் திமுகவும்தான் பலமாக விமர்சித்து கொள்வார்கள்.. ஆனால் இந்த முறை திமுக VS பாஜக என்ற ரீதியில்தான் பிரச்சாரங்கள் நகர்ந்து வருகின்றன.. இதைதான் நேற்று ஸ்டாலின், "திமுகவுக்கும் ஆளுங்கட்சிக்கும் நடுவே இருக்கிற போட்டி இல்லீங்க.. இது தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையே நடக்கிற யுத்தம்.." என்று கூறியிருந்தார். அதுதான் தற்போதைய பிரச்சாரங்களிலும் தென்பட்டு வருகிறது
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications