புத்தாண்டு பரிசு காத்திருக்கிறது! டிசம்பரிலேயே அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்? இந்த துறைகளுக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : வருகிற டிசம்பர் 14ந்தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் நீண்ட காலமாகவே அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரைப்படத் துறையில் தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் அவர்.

அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனம் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து காமெடி படங்களிலும், அடுத்ததாக சில கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்து ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் . இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து திமுகவின் இளைஞர் அணி செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

 இளைஞர் அணி செயலாளர்

இளைஞர் அணி செயலாளர்

கட்சி சார்பில் நடைபெற்று வந்த போராட்டங்களில் தான் ஒரு சாதாரண தொண்டன் எனக்கூறி கலந்து கொண்ட அவருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டதை வெளியில் இருந்தவர்கள் விமர்சித்தாலும் கட்சிக்குள் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலிலும் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் சென்னை சேப்பாக்கம் திருவிழா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அங்கு வெற்றி பெற்ற அவர் அமைச்சராக்கப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவியது.

கோரிக்கை குரல்கள்

கோரிக்கை குரல்கள்

ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும் ரசிகர் மன்ற நிர்வாகியுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் .இந்நிலையில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக போகிறார் என்ற பேச்சுக்கள் அடிக்கடி எழுவது வழக்கமாகி இருக்கிறது. தற்போது திமுக ஆட்சியில் ஏற்கனவே ஜூனியர் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலினையும் அமைச்சராக வேண்டுமென முதன்முறையாக குரல் எழுப்பினார் அன்பில் மகேஷ்.

சீனியர் அமைச்சர்கள்

சீனியர் அமைச்சர்கள்

இதை அடுத்து சேகர் பாபு, சிவசங்கர், மூர்த்தி உள்ளிட்ட பல சீனியர் அமைச்சர்களே உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். உச்சபட்சமாக கௌதம் சிகாமணி உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என துண்டு போட்டு வைத்திருக்கிறார். இப்படியான பேச்சுக்கள் மீண்டும் எழுந்து வரும் நிலையில் உதயநிதிக்கு இளைஞர் நலன் , விளையாட்டு, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் அல்லது செய்தி துறை ஒதுக்கப்படலாம் எனவும் சமூக வலைதளங்களில் திமுகவினர் கூறி வருகின்றனர்.

14ந்தேதி அமைச்சரவை மாற்றம்

14ந்தேதி அமைச்சரவை மாற்றம்

இந்நிலையில் வரும் 14ந்தேதி அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே ஒரு முறை தமது அமைச்சரவையை மாற்றியமைத்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த மாற்றத்தின்போது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்பட்டோர் நலத்துறைக்கும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கும் மாற்றப்பட்டனர்.

உண்மையா?

உண்மையா?

இந்நிலையில் வரும் 14ந்தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதனால் திமுக இளைஞரணியினர் தற்போது மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் என கொண்டாடி வருகின்றனர். ஆனால் இது உறுதிபடுத்தப்பட்ட தகவல் இல்லை எனவும் சில திமுக உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+