மதுரை, குமரி, சிவகங்கை.. மொத்தமாக ஸ்வீப் செய்யும் திமுக.. இந்த கருத்து கணிப்பை பாருங்க.. பாஜக நிலை?
சென்னை: மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளை திமுக கூட்டணி மொத்தமாக ஸ்வீப் செய்யும் என்று லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
அக்னி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பாக இந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பிரபல கருத்து கணிப்பு நிறுவனமான சி வோட்டர் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்த சுரேஷ் குமார் என்பவர் மூலம் அக்னி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பாக இந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

சிவகங்கை கருத்து கணிப்பு: சிவகங்கையில் பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டி போடுவதற்கான அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்தை மீண்டும் களமிறக்கி உள்ளனர். இதனால் சிவகங்கை தொகுதியில் போட்டி மிகக் கடுமையானதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இங்கே காங்கிரஸ் 54%
அதிமுக 28 %
பாஜக 12%
நாம் தமிழர் 4 %
மற்றவை 2% எடுக்கும் என்று தற்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அக்னி நியூஸ் தெரிவித்துள்ளது. அதாவது காங்கிரஸ் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கையில் பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டி போடுவதற்கான அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்தை களமிறங்குகிறார். இவர் 2016ல் திருவாடானை தொகுதியில் அதிமுகவின் கருணாஸை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 11,842 வாக்குகள் மட்டுமே பெற்று இவர் தோல்வி அடைந்தார்.
கடந்த முறை சிவகங்கையில் 566,104 வாக்குகள் பெற்று கார்த்தி சிதம்பரம் வென்றார். இவரை எதிர்த்து பாஜகவின் எச் ராஜா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எச் . ராஜாவிற்கு இங்கே 2,33,860 வாக்குகள் கிடைத்தன. அமமுக வேட்பாளர் பாண்டி 1,22,534 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த முறை எச். ராஜாவிற்கு பதிலாக தேவநாதன் யாதவ் இங்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்தை களமிறக்கி உள்ளது. இங்கே அதிமுக சார்பாக சேவியர் தாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

கன்னியாகுமரி கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 49%
பாஜக 27%
அதிமுக 21%
நாம் தமிழர் 1.5 %
மற்றவை 1.5% என்று தற்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அக்னி நியூஸ் தெரிவித்துள்ளது. அதாவது காங்கிரஸ் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரி லோக்சபா தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த் களமிறக்கப்பட்டு உள்ளார். கன்னியாகுமரியில் பாஜக சார்பாக பொன் ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டு உள்ளார். இங்கே அதிமுக சார்பாக பசிலியா நசரேத் களமிறங்கி உள்ளார். வசந்தகுமார் மறைவை தொடர்ந்து 2021ல் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் இங்கே அவரின் மகன் விஜய் வசந்த் 576,037 வாக்குகள் பெற்று வென்றார். பொன் ராதாகிருஷ்ணன் 438,087 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

மதுரை கருத்து கணிப்பு:
சிபிஐ(எம்) 51 %
அதிமுக கூட்டணி 35%
பாஜக கூட்டணி 9 %
நாம் தமிழர் 4%
மற்றவர்கள் 1%
என்று தற்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அக்னி நியூஸ் தெரிவித்துள்ளது. அதாவது திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதிமுக சார்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மருத்துவர் சரவணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதில் திமுக கூட்டணியில் மதுரையில் சிபிஎம் சார்பாக தற்போது உள்ள எம்பி சு வெங்கடேசன் போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளராக ராம் சீனிவாசன் போட்டியிடுகிறார். கடந்த முறை இங்கே சிபிஎம் சார்பாக தற்போது உள்ள எம்பி சு வெங்கடேசன் 447,075 வாக்குகள் பெற்று வென்றது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications