7 "கரங்களுடன்" உதயநிதி ஸ்டாலின்.. அதிரடி செயல் திட்டங்கள்...புதிய பாய்ச்சலில் திமுக இளைஞர் அணி !
Recommended Video
சென்னை: திமுக இளைஞர் அணி 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த செயல் திட்டங்களை தந்திருப்பதன் மூலம் அந்த அமைப்புக்கு புதிய பாய்ச்சல் கிடைத்துள்ளதாக மகிழ்கின்றனர் கட்சியின் நிர்வாகிகள்.
திமுகவில் பல்வேறு அணிகள் இருந்த போதும் இளைஞர் அணி என்பது வலிமை மிக்க பிரிவாக இருந்து வந்தது. மு.க. ஸ்டாலின் தலைமையில் கீழ் இளைஞர் அணி இருந்ததால் இந்த முக்கியத்துவம் கிடைத்தது என கூறப்படுவதும் உண்டு.
ஸ்டாலினிடம் இருந்து இளைஞர் அணி கை மாறிய நிலையில் அப்படியே முற்றாக செயலிழந்த நிலைக்குப் போய்விட்டது. இதனால் இளைஞர் அணியினர் திக்கு தெரியாத காட்டில்விடப்பட்டவர்களாக இருந்தனர்.

இளைஞர் அணியில் உதயநிதி
இந்நிலையில்தான் ஸ்டாலின் மகன் உதயநிதி, இளைஞரணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். தாம் அப்பதவியில் அமர்ந்தது முதல் இடைவிடாது தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள், அடுத்தடுத்த செயல் திட்டங்கள் என தீவிரமாக இயங்கி வருகிறார் உதயநிதி.

மண்டலங்கள் பிரிப்பு
இதன் ஒரு கட்டமாக இளைஞர் அணியை 7 மண்டலங்களாகப் பிரித்து பாசறை கூட்டங்கள், பயிலரங்கங்கள் என பல்வேறு செயல்திட்டங்களையும் கொடுத்திருக்கிறார் உதயநிதி. இவை அத்தனையுமே திமுகவின் இளைஞர் அணியினருக்கு மிகப் பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கின்றன என்பது யதார்த்தம்தான்.

சார்பு செயல்பாடுகள்
ஆனால் உதயநிதி மேற்கொள்ளும் இத்தனை வியூகங்களும் எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது? என்கின்ற கேள்வியையும் மூத்த நிர்வாகிகள் எழுப்பவும் செய்கின்றனர். ஏனெனில் தற்போதைய மண்டல பொறுப்பாளர்களில் பலருக்கும் கள அனுபவம் என்பதே இல்லை. இவர்கள் களப்பணிக்காக நிச்சயம் மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்களை மட்டுமே சார்ந்து செயல்படக் கூடிய அளவுக்குத்தான் திறன் கொண்டவர்கள்.

கட்சியை கட்டமைப்பார்களா?
உதயநிதியிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக உறுப்பினர் சேர்க்கை பட்டியல்கள், பயிலரங்குகள் எண்ணிக்கையை அதிகரித்து காட்டலாமே தவிர எந்த அளவுக்கு திமுகவின் அடிப்படை கொள்கையை மையமாக வைத்து இவர்கள் கட்சியை கட்டமைக்கப் போகிறார்கள்? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் இதே இளைஞர் அணியில் கொள்கை பிடிப்பு கொண்டவர்கள், கொள்கைக்காக சிறை சென்றவர்கள், களப்பணி ஆற்றியவர்கள் ஏராளம்.

யாரும் இல்லையே...
அதனாலேயே இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்களாக இருந்தவர்கள் பின்னாளில் இளைஞரணியின் மாநில பொறுப்புகள், கட்சியின் மாவட்ட செயலாளர் பதவி என பலரும் ஏற்றம் பெற்றனர். அத்தகைய ‘ஸ்டாலின் காலத்து' போக்கும் அனுபவசாலிகளும் தற்போதைய இளைஞரணியில் தேடினாலும் கிடைக்காத நிலை உள்ளது என கூறப்படுகிறது.

திமுகவுக்கு பயன் தருமா?
உதயநிதியின் நியமனம் தோற்றத்தில் இளைஞரணிக்கு புதிய உற்சாகத்தை தரும். அதே நேரத்தில் திமுகவின் அடிப்படை கட்டுமானத்தை மிகவும் வலிமைமிக்கதாக உருவாக்குமா? என்ற கேள்விக்கு தயக்கமான பதிலையே தருகின்றனர் கட்சியின் சீனியர் நிர்வாகிகள்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications