சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கைமாறிய “குட் லிஸ்ட்”! திமுக சீனியர்களுக்கு ரெஸ்ட் - மாவட்டத்தில் யாருக்கு பவர்? கட்சியில் “மாற்றம்”

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மாவட்ட செயலாளார்கள் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் சூழலில், பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உட்கட்சித் தேர்தலில் முக்கிய நிகழ்வான மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தப்படும் முதல் மாவட்ட செயலாளர் தேர்தல் என்பதால் இதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு "போட்டா போட்டி".. இன்றுடன் ஓய்கிறது வேட்புமனுத் தாக்கல்

சக்திவாய்ந்த பதவி

சக்திவாய்ந்த பதவி

திமுகவில் அமைப்பு ரீதியாக மொத்தம் 72 மாவட்டங்கள் உள்ளன. கட்சியின் மாவட்ட நிர்வாகத்தின் முதன்மை பதவியாக மாவட்ட செயலாளர் பதவி இருக்கிறது. ஆனால், பல மாவட்டங்களில் இந்த பதவியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நபர்களே இருந்து வருகின்றனர். எம்.பி., எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களை விட மாவட்ட கட்சி நிர்வாகத்தில் இவர்களுக்கே பவர் அதிகம்.

பெரும் மாற்றம்

பெரும் மாற்றம்

எனவே இந்த பதவியை கைப்பற்ற போட்டா போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே சில மாவட்டங்களில் உட்கட்சி சச்சரவுகள் வெடிக்கத் தொடங்கின. ஆனால் திமுக தலைமை அவர்களை அழைத்து சமரசம் பேசி இருக்கிறது. இம்முறை ஏராளமான மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என அறிவாலய வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

 இளைஞர்களுக்கு வாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு

குறிப்பாக சீனியர் மாவட்ட செயலாளர்களையும், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் முறையாக செயல்படாத, கட்சி கட்டுப்பாடுகளை மீறிய மாவட்ட செயலாளர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். அவர்களுக்கு பதிலாக இளைஞரணியை சேர்ந்த சிலருக்கு வாய்ப்பளிக்க உதயநிதி ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குட் லிஸ்ட்

குட் லிஸ்ட்

அதேபோல் 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நேரத்திலும், தேர்தல் சமயத்திலும் சிறப்பாக செயல்பட்டு குட் லிஸ்டில் இருப்பவர்களின் பெயர்களையும் டிக் அடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும் புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இம்மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் தொடக்கத்திலோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Anna Arivalayam Sources said that there will be major changes in the various district administrations as the nomination filing for the DMK district secretaries election ends today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X