சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை கேட்க கூடாது- நியாய விலைக் கடைகளுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது என நியாய விலைக் கடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்த சுற்ற்றிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 14 லட்சத்து 86 ஆயிரத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு வங்கி கணக்கு எதுவும் இல்லை.

கிளம்பிய நூதன மோசடி.. ஆதார் ஈபி லிங்க் பண்ணலயா? 'க்ளிக்’ பண்ணா காலி.. டிஜிபி சைலேந்திரபாபு வார்னிங்! கிளம்பிய நூதன மோசடி.. ஆதார் ஈபி லிங்க் பண்ணலயா? 'க்ளிக்’ பண்ணா காலி.. டிஜிபி சைலேந்திரபாபு வார்னிங்!

ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்க

ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்க

எனவே அவர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க வேண்டும். இவர்களில் யாராவது வங்கி கணக்கு ஏற்கனவே வைத்திருந்தால் அந்த விவரங்களை பெற வேண்டும். கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கை தொடங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

வங்கி கணக்கு எண் இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையை நேரில் அணுகி ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், உணவு பொருள் வழங்க மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், அனைத்து துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு இன்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆதார் எண் இணைக்காத பட்சத்தில்

ஆதார் எண் இணைக்காத பட்சத்தில்

வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை அவர்களின் நியாய விலை கடையில் பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். ஏற்கனவே வங்கிக் கணக்கு இருந்தால், அந்த குடும்ப அட்டைதாரர்களை (ஆதார் எண் இணைக்காத பட்சத்தில்) அந்த வங்கிக்குச் சென்று அவர்களின் ஆதார் நம்பரை இணைக்க அறிவுறுத்த வேண்டும்.

நகலை பெறக்கூடாது

நகலை பெறக்கூடாது

இல்லாவிட்டால், அருகில் உள்ள கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ புதிய கணக்கை தொடங்கி, அதில் ஆதார் நம்பரை இணைத்து, அந்த விவரங்களை தங்களின் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் தெரிவிக்கும்படி அறிவுறுத்த வேண்டும். குடும்ப அட்டை தாரர்களிடம் இருந்து எந்த காரணத்தை கொண்டும் துறை அலுவலர்கள் ஆதார் எண்ணையோ, ஆதார் அட்டையின் நகலையோ பெறக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Food Department has advised the Ration shops not to ask for the Aadhaar number details of the family card holders for any reason and not to get a copy of the Aadhaar card.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X