"அதே ஜூன் 12" .. பீலா ராஜேஷை போல் "மாற்றப்பட்ட" ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்!
சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்ட அதே ஜூன் 12 ஆம் தேதி தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி ஒரு ஆட்சிக்கு நற்பெயர் ஏற்பட காரணம் அதன் நிர்வாகத் திறன் ஆகும். அந்த நிர்வாகத்தை திறம்பட செய்து வருபவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள்.
அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது இந்த ஐஏஎஸ் அதிகாரிகள்தான். ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றத்தின் போது தங்களுக்கு சரிபட்டு வரும் அதிகாரிகளை மாற்றுவது இயல்பான ஒன்றுதான்.

குற்றச்சாட்டுகள்
அது மட்டுமல்லாமல் ஏதேனும் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் இடமாற்றம் செய்யப்படுவர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினின் குட் வில் புக்கில் இடம் பெற்றுள்ள சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ ராதாகிருஷ்ணன் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா
கொரோனாவை மிகவும் சிறப்பாக கையாண்ட ஜெ ராதாகிருஷ்ணன் மாற்றியமைக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான காரணத்தை அலசுவதற்குள் இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது. அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டது ஜூன் 12 ஆம் தேதி தானாம்.

பீலா ராஜேஷ்
அந்த ஜூன் 12, 2019 ஆம் ஆண்டு பீலாவுக்கு பதிலாக ஜெ ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அன்று முதல் இவர் கொரோனா பாதிப்புகளை சிறப்பாக கையாண்டு வருகிறார். 2ஆவது அலை உச்சத்தில் இருந்த போது திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி போல் இயங்கிய ஜெ ராதாகிருஷ்ணன் ஆட்சிக்கும் பெருமை சேர்த்தார்.

3ஆவது அலை
அது போல் 3 ஆவது அலை நம் கிட்டயே நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டவரும் அவரேதான். கொரோனா பாதிப்பு 3ஆவது அலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்திருக்கலாம். ஆனால் பெரிய அளவில் பாதிப்பு வராமல் தடுத்தது சுகாதாரத் துறைக்கு பங்கிருக்கிறது.

ஹாட்ஸ்பாட்
அது போல் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை விஐடி என கொரோனா ஹாட்ஸ்பாட் இடங்களிலும் அவர் கொரோனா பாதிப்பை திறமையாக கையாண்டார். இந்த நிலையில்தான் நேற்றைய தினம் ஜூன் 12 ஆம் தேதி அவர் சுகாதாரத் துறை செயலாளர் பதவியிலிருந்து வேறு ஒரு பதவிக்கு மாற்றப்பட்டார். அதாவது 3 ஆண்டுகளுக்கு முன்பு எந்த நாளில் பொறுப்பேற்றாரோ அதே நாளில் இடமாற்றப்பட்டார் ஜெ ராதாகிருஷ்ணன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications