Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் சிலிண்டர் வேணுமா? இந்த நம்பர் போதுமே.. பழைய சமையல் சிலிண்டரை மாற்றும்போது இவைகள் தான் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் உங்களுக்கு தேவையா? அதை ஆன்லைனில் எப்படி புக் செய்வது ? கேஸ் சிலிண்டரில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? கேஸ் சிலிண்டர் புதுசு மாற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர்களை வாங்கும்போதே சரியான டீலர்களிடமிருந்து வாங்க வேண்டும். பிளாக் மார்க்கெட்டில் சிலிண்டர் வாங்குவது பாதுகாப்பானது கிடையாது.

Gas Cylinder LPG Gas Cylinder Gas Booking

காற்றோட்டம் வசதிகள்

கிச்சனில் கேஸ் சிலிண்டரை எப்போதுமே, தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்கும்படி வைக்க வேண்டும்.. முக்கியமாக காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும்.. அதேபோல, பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்துதான், சிலிண்டரை உபயோகிக்க வேண்டும்..

வீட்டிலுள்ள குழந்தைகள், கேஸ் சிலிண்டர் குழாயை திருப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் கைகளுக்கு எட்டாதவாறு சிலிண்டரை வைத்திருக்க வேண்டும்.

தரமான ரப்பர் குழாய்கள் அவசியம்

எப்போதுமே வீட்டிலுள்ள கேஸ் குழாய்களின் பைப் லைனை ஆறு மாதமொரு மாற்ற வேண்டும். ரப்பர் குழாயில் வெடிப்புகள், துளைகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். ஒருவேளை சிலிண்டர் அல்லது ரப்பர் குழாயில் கசிவு இருப்பதாக தெரிந்தால், உடனே சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும்... பிறகு, சமையலறையின் கதவு, ஜன்னல்களை திறந்துவிட வேண்டும்.

பழைய சிலிண்டர்கள்

பழைய சிலிண்டரின் ட்யூபை பிரித்து எடுப்பதற்கு முன்பேயே, புதிய சிலிண்டரை திறக்கககூடாது. சிலிண்டரைப் பொருத்தியதும், சிறிய அளவிலாவது கசிவு இருக்கிறதா? கேஸ் வாடை வருகிறதா என்பதை கவனித்து கொள்ள வேண்டும். பழைய சிலிண்டர் தீர்ந்து புது சிலிண்டர் மாட்டும்போதும், எல்லா விளக்குகளையும் அணைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் ஸ்டவ், இன்டக்‌ஷன் ஸ்டவ், ஹாட்பிளேட் போன்ற எதுவுமே இயங்கக்கூடாது.

வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யப்படும் சிலிண்டர், சரியாக சீல் வைக்கப்பட்டுள்ளதா? அதன் பாதுகாப்பு மூடி சேதமடையாமல் இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். அதேபோல சிலிண்டரின் மூடியை திறப்பதற்கு மர சுத்தியல்தான் பாதுகாப்பானது.. எக்காரணம் கொண்டும், இரும்பு கத்தியை பயன்படுத்த கூடாது.

கேஸ் லைட்டர்கள் தவிர்க்கலாம்

அதேபோல, கேஸ் அணைப்பதற்கு முன்பு, ரெகுலேட்டர் வால்வை மூடிவிட்டு, பிறகுதான் வால்வை மூட வேண்டும். அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடியதும், சிலிண்டரை மாற்ற வேண்டும்.. சிலிண்டரை மாற்றும்போது, மின்சாரம் தொடர்பாக எதுவும் இயங்கக்கூடாது. ஊதுவத்திகூட அணைத்து விட வேண்டும்.

கேஸ் பற்ற வைக்க லைட்டருக்கு பதிலாக தீக்குச்சிகளை பயன்படுத்தலாம். ஏனென்றால், லைட்டரில் அடைப்புகள் இருந்தால், நெருப்பு வராமல் மக்கர் செய்துவிடும். இதனால் கேஸ் வெளியேறி கொண்டேயிருக்கும். அப்படி திடீரென நெருப்பு பற்றிக்கொள்ளும்போது, நம்மீதும் நெருப்பு பட வாய்ப்புள்ளது.. எனவே தீக்குச்சிகளை பயன்படுத்துவதை அதிகரிக்கலாம்.

எப்படி கேஸ் புக்கிங் செய்வது

சமையல் சிலிண்டரை புக்கிங் செய்து பெற வேண்டுமானால், போன் கால், SMS, ஆன்லைன், மொபைல் ஆப், வாட்டஸ்அப் இப்படி பல வசதிகள் உள்ளன.. செல்போனில் Indane Gas புக் செய்ய வேண்டுமானால், 7588888824 என்ற எண் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். நீங்கள் HP கேஸ் வாடிக்கையாளராக இருந்தால், 92222 01122 என்ற எண் மூலம் புக்கிங் செய்யலாம்.

Bharat Petroleum சிலிண்டர் வாங்குவதாக இருந்தால் 1800224344 என்ற எண்ணிற்கு "Hi" என மெசேஜ் அணுப்பினாலே, உங்களுக்கு சிலிண்டர் புக் செய்யப்பட்டுவிடும். இதைத்தவிர, Paytm, PhonePay, Google pay மூலமாகவும் சிலிண்டரை புக் செய்யலாம். கிரெடிட் கார்டு மூலமும் புக் செய்யலாம். ஆனால், அதன சலுகைகளை சரிபார்த்து, அதற்கேற்ற உள்ள தளத்தில் புக்கிங் செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+