அழகில் மயங்கிய ஆங்கிலேயர்கள்.. கிண்டி ராஜ்பவன் சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா?
சென்னை: சென்னையில் சைதாப்பேட்டையில் இருந்து கிண்டிக்கோ, வேளச்சேரிக்கோ, அடையாறுக்கோ செல்லும் போது, மிகவும் அற்புதமான குளுகுளுவென காற்றும் வீசும் அதிக மரங்கள் நிறைந்த பகுதியாக கிண்டி ராஜ்பவன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். சென்னையிலேயே மிகவும் குளுகுளுவென இருக்கும் இந்த இடம் சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? இது எப்படி ஆளுநர் மாளிகையாக மாறியது என்பதை பார்ப்போம்.
சென்னை மாநகரில் வசிக்கும் பலருக்கும் கிண்டி ராஜ்பவனை கடந்து செல்லும் போது, இங்கு மட்டும் எப்படி, இவ்வளவு குளுகுளுவென காற்று வருகிறது. சாலை இவ்வளவு அழகாக இருக்கிறது. எவ்வளவுஅற்புதமான மரங்கள் நின்று சற்று மனம் தடுமாறியபடித்தான் கடந்து செல்வார்கள். அப்படித்தான் முதன்முதலாக வெள்ளைக்கார ஆளுநர், பரங்கிமலையில் வழிபாடு நடத்த வண்டியில் போனபோது தடுமாறினார்கள். என்னடா இந்த இடம் இவ்வளவு அழகாக இருக்கிறது. இங்கு மாளிகை கட்டினால் எப்படி இருக்கும் என்று யோசித்தார்.

அப்படி ஆளுநர் வில்லியம் லாங்ஹார்ன் கட்டிய மாளிகை தான் கிண்டி லாட்ஜ். கிண்டி முதல் தரமணி வரை மிகப்பெரிய காடுகளுடன் அமைந்திருந்துள்ள இந்த இடத்தின் அழகு வில்லியம் லாங்ஹார்னை மயக்க காரணம்.. அற்புதமான மரங்களும், ஏரளமான வனவிலங்கும் வசித்த பகுதி என்பதுதான்.. சென்னை மாநகரம் என்பது அந்த காலத்திலேயே பெரிய நகரமாக இருந்ததால், நல்ல அமைதியான காடுகள் நிறைந்த பகுதியை விரும்பினார் வில்லியம் லாங்ஹார்ன். அப்படி அமைதியை கட்டியது தான் கிண்டி லாட்ஜ். இந்த கிண்டி லாட்ஜ் 1670களில் கட்டப்பட்டது.
1678 ஆளுநர் வில்லியம் லாங்ஹார்ன் வெளியேறியபோது, அவர் சென்னை மாநகரின் நிறுவனர்களில் ஒருவரான பெசி திமப்பாவின் தம்பியான சின்ன வெங்கடாத்ரிக்கு சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டது. அப்போது எல்லாம் பிரிட்டீஷ் அரசு நேரடியாக இந்தியாவை ஆளவில்லை.. ஒரு காலக்கட்டத்தில் சின்ன வெங்கடாத்ரிக்கு கிழக்கிந்திய கம்பெனியுடன் பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனையடுத்து அவர், கிண்டி லாட்ஜை மெட்ராஸ் அரசுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மற்றும் மைசூர் ஆகியோரால் கிண்டி லாட்ஜ் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரையிலும் அரசின் 'நாட்டு இல்லமாக' பயன்படுத்தப்பட்டது. கிண்டி லாட்ஜ் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனியாரின் கைகளுக்கு மாறியது. சென்னையைச் சேர்ந்த கில்பர்ட் ரிக்கெட்ஸ் என்பவருக்கு இந்த சொத்து கைமாறியது. அவர் 1813 இல் அரசாங்க வங்கியில் கடன் பெற்றார். பின்னர் 1817 ஆம் ஆண்டு கடனை கட்டாமல் டிசம்பரில் ரிக்கெட்ஸ் இறந்து போனார். பெரும் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள் நீதிமன்ற கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் சட்ட நடவடிக்கைளுக்கு பிறகு வங்கி நிர்வாகம், 1821 இல் அந்த காலத்திலேயே ரூ.35,000க்கு கிண்டி லாட்ஜ் சொத்தை வழங்கியது. இது தவிர ஆங்கிலேயே அரசு, ஆர்மீனிய வணிகர் ஜோசப் நாசர் ஷாவ்மியரிடம் இருந்து ரூ.8,750க்கு அருகிலுள்ள சொத்தையும் கையகப்படுத்தியது.

கிண்டி லாட்ஜ்ஜை இப்போது உள்ள ராஜ்பவனாக மாற்றி, அதில் கவர்னராக சர் தாமஸ் மன்ரோ பொறுப்பேற்றார்.அதனை நாட்டு மாளிகை என்ற பெயரில் பயன்படுத்தினார். சர் தாமஸ் மன்ரோ தான் முதல்முறையாக கிண்டி ராஜ்பவனில் ஆளுநராக பணியாற்றியவர் ஆவார். அவர் தான் மொத்த மாளிகையையும் பழமை மாறாமல் கட்டினார். அதன்பிறகு வந்த கவர்னர்கள் - ட்வீடேல், சர் ஹென்றி பாட்டிங்கர், லார்ட் ஹாரிஸ் மற்றும் சர் வில்லியம் டெனிசன் ஆகியோரும் மார்க்யூஸ் மாளிகையை மேம்படுத்தி வந்தார்கள். அறுதியில் 1863 வாக்கில் லாட்ஜ் அதன் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.
சுதந்திரத்திற்குப் பிறகு ராஜ்பவனை ஒட்டிய பெரிய நிலங்கள் மற்ற பொது நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள. ராஜ் பவனுக்கு சொந்தமான இடத்தில் தான் சென்னை ஐஐடி இருக்கிறது. கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பூங்கா, அரசியல் தலைவர்களுக்கான பல்வேறு நினைவுச் சின்னங்கள் மற்றும் புற்றுநோய் நிறுவனம் ஆகியவை கிண்டி ராஜ்பவனை ஒட்டியுள்ளன. 1954ல் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கும், 1974ல் ராஜாஜி நினைவிடத்துக்கும், 1975ல் காமராஜர் நினைவிடத்துக்கும் நிலம் ஒதுக்கப்படடத. 1958 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 625 ஏக்கர் நிலம் தமிழ்நாடு வனத் துறைக்கு ஒரு பூங்காவிற்கு மாற்றப்பட்டது. அதேபோல் 1977 ஆம் ஆண்டில், தேசிய பூங்காவுக்காக கிட்டத்தட்ட 88 ஏக்கர் வனத்துறைக்கு வழங்கப்பட்டது.

கிண்டி ராஜ்பவனில் கிழக்கு மற்றும் வடக்கே அலங்கார தோட்டங்கள், மேற்கு மற்றும் வடக்கே தோட்டக்கலை மற்றும் மூலிகை தோட்டங்கள் ஆகியவை குடியிருப்புக்கு பசுமையான அமைப்பைக் கொடுக்கின்றன. ராஜ் பவனில் வேறு சில வரலாற்று கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. மேலும் வெள்ளை மாளிகை, காட்டேஜ், தி நூக், கவர்னர் செயலகம் மற்றும் கவர்னர் மாளிகை அலுவலகம் ஆகியவை ராஜ்பவனில் உள்ள குடியிருப்புகள் ஆகும். பள்ளி மாணவர்கள் ஆளுநர் மாளிகையை சுற்றிப்பார்க்க முடியும். அதற்கு ஆன்லைனில் அனுமதி அளிக்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications