வருமான வரி செலுத்திட்டீங்களா.. உங்க வீட்டில் பணம் + தங்க நகை வைத்திருக்கிறீர்களா? அப்ப இதை படிங்க
சென்னை: உங்கள் வீட்டிற்குள் பணம், தங்கநகைகள் வைத்திருக்கிறீர்களா? இதுகுறித்து வருமானவரித்துறை முக்கிய அலர்ட் ஒன்றை தந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில், தமிழ்நாடுதான் முன்னிலையில் உள்ளது என்கிறார்கள்.. இதற்கு காரணம், தங்க நகைகள் மீதான மோகம் பெண்களிடம் இன்னமும் குறையாமல் இருப்பதுதான்..

உயர்வு: அதற்கேற்றபடி தங்கத்தின் மதிப்பும், விலையும் குறையாமலேயே இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலை பெரும்பாலான நேரங்களில் உயர்ந்தும், சில சமயங்களில் மட்டும் குறைந்தும் வருகிறது.
எனினும் தங்க நகைகளை ஆர்வத்துடன் வாங்கி விடுகிறார்கள்.. சிலர் வீடுகளில் தங்கம் மற்றும் பணத்தை வைத்திருப்பார்கள்.. வீட்டில் தங்கம் இருந்தால் செழிப்பாக இருக்கும் என்று இந்திய மக்கள் பலரும் நம்பிக்கை உள்ளது.. அனைத்து வங்கிகளிலுமே லாக்கர் வசதி இருந்தாலும்கூட, வீட்டில் நகை வைத்திருப்பதை பலர் விரும்புவார்கள்.
விதிகள்: ஆனால், இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.. எவ்வளவு தங்கத்தை நாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான அரசாங்க விதிகள் உள்ளது.. வரித்துறையும் இதுகுறித்து பலமுறை தெளிவுபடுத்தி உள்ளது. 1994ம் ஆண்டில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தங்கம் தொடர்பாக சில வழிமுறைகளை வெளியிட்டது.
பொதுவாக, தங்கம் நாம் வைத்திருப்பதற்கு எந்த தடையும் இல்லைதான்.. ஆனால், தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரங்களையும், ஆவணங்களையும் நாம் வைத்திருக்க வேண்டும்... அதுவும், ஒரு நபரின் பாலினம் மற்றும் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நகையை அவர் வைத்திருக்கலாம்.
பணமதிப்பு: திருமணமான பெண் 500 கிராம், அதாவது 62.5 சவரன் தங்கத்தையும், திருமணம் ஆகாத பெண் 250 கிராம், அதாவது, 31.25 சவரன் மதிப்புள்ள தங்கத்தை வைத்துக்கொள்ளலாம். திருமணமான மற்றும் திருமணம் ஆகாத என 2 தரப்பு ஆண்களுமே 100 கிராம் எடையுள்ள அதாவது 12.5 சவரன் தங்க ஆபரணங்களையும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வைத்திருக்கலாம்.
மேற்கூறிய அளவு வைத்திருப்பவரின் தங்கத்தை வருமான வரித்துறையினர் சோதனையிடும்போது பறிமுதல் செய்ய முடியாது... ஒருவேளை தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் தங்கம் வைத்திருப்பதற்கு வரம்பு எதுவும் கிடையாது.. ஆனால், வருமான வரித்துறையின் சோதனையின் போது வரி செலுத்துவோரின் நகைகளை பறிமுதல் செய்வதிலிருந்து விடுவிப்பதற்காக மட்டுமே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அபராதம்: தங்கத்தைப் போலவே பணத்திற்கும் வரைமுறை உள்ளது.. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடும்போது, கையிலுள்ள பணம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என ஆதாரங்கள், ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். முறையான ஆவணங்களை காட்டிவிட்டால், பிரச்சனையில்லை.. ஆதாரத்தை காட்ட தவறினால், எவ்வளவு பெரிய தொகையானாலும் பறிமுதல் செய்யப்பட்டுவிடும்.. அத்துடன் 137 சதவீதம் வரை அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
நீங்கள் தங்கத்தை பரிசாகவோ அல்லது பரம்பரையாகவோ பெற்றிருந்தால், அதற்கான ஆவணத்தை நீங்கள் காட்ட வேண்டும். வருமான வரிக்கணக்கிலும் இதை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு ஆவணமாக, தங்கத்தைப் பரிசளித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரசீதையும் காட்டலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications