பானிபூரி சாப்பிட்ட நரிக்குறவர் பெண்.. திடீர்னு ஒரே எத்து.. மண்டை பிளந்து.. சென்னை போரூரில் பரபரப்பு
சென்னை: சென்னையில், நரிக்குறவ சமூக பெண் ஒருவரை, கொடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது தொடர்பாக நடவடிக்கையை உடனடியாக போலீசார் எடுக்க வேண்டும் என்றும் அச்சமூக மக்கள் கொந்தளிப்புடன் கூறி வருகிறார்கள்.. என்ன நடந்தது?
சென்னை போரூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. போரூர் அடுத்துள்ளது மாதா நகர் மெயின் ரோடு பகுதி.. இந்த பகுதியை சுற்றிலும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.. நேற்றிரவு 8 மணி அளவில், இந்த இனத்தை சேர்ந்த பெண்கள் சிலர், அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு, பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

பானிபூரி: அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு பைக்கில் வந்துள்ளார்.. 50 வயது மதிக்கத்தக்க இந்த வீட்டு ஓனர், தன்னுடைய வீட்டுவாசலில் உட்கார்ந்திருந்த பெண்களை பார்த்ததுமே, கோபப்பட்டுள்ளார்.. இதனால், தகாத வார்த்தைகளால் அந்த பெண்களை திட்டி, மோசமாக பேசியிருக்கிறார்.. அத்துடன், தன்னுடைய பைக்கிலிருந்த அரிசி மூட்டையை தூக்கி வந்து, ராதா என்ற நரிக்குறவ பெண்ணின் மீது போட்டுள்ளார்...
பிறகு தன்னுடைய வீட்டிற்குள் சென்று, பெரிய விறகு கட்டையை கொண்டுவந்து, அந்த பெண்ணின் தலையிலேயே கொடூரமாக தாக்கியிருக்கிறார்.. இதில் ராதா, அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்து விழுந்தார்... இதைப்பார்த்து பதறிப்போன மற்ற பெண்கள், அவரை உடனடியாக அங்கிருந்து மீட்டு பூவிருந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்..
தாக்குதல்: அங்கு ராதாவுக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது... பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மாங்காடு போலீசிலும் புகார் தரப்பட்டது.. இந்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
தன்னுடைய வீட்டு வாசலில் நரிக்குறவர் இன பெண்கள் உட்கார்ந்திருந்ததால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவம்தான் இணையத்தில் சிசிடிவி காட்சியாக வெளிவந்து சென்னைவாசிகளை பதற வைத்துள்ளது.
இரவு நேரம் என்பதால், சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.. இந்த பிஸியான ரோட்டில், பெண்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், இதில் மண்டை உடைந்து தரையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் விழுவதும், இந்த சம்பவத்தை சுற்றிலும் ஏராளமானோர் திரண்டு நின்று வேடிக்கை பார்ப்பதும், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது..
அந்த வீட்டு ஹவுஸ் ஓனர், அரிசி மூட்டையை பெண்ணின் மீது போட்டு கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்த சிசிடிவிக்காட்சி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கை: இதைப்பார்த்து பதறிய பொதுமக்கள், நரிக்குறவ பெண் என்பதால் அவரை மனிதாபிமானமின்றி, வீட்டு வாசலில் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்...
கடந்த ஆகஸ்ட் மாதமும், இப்படித்தான் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில், நரிக்குறவர் மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டிருந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருந்தது.
இங்குள்ள ஜெயா நகர் நரிக்குறவர் காலணியில், நீதிமன்ற உத்தரவுடன் சுற்றுச்சுவர் எழுப்ப முயன்ற போலீசாரை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, நடந்த வாக்குவாதத்தில், பெண் போலீசார் சிலர், நரிக்குறவ பெண்களைத் தாக்குவது போன்ற காட்சிகளும் இணையத்தில் வெளியகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து தங்களை இழிவுபடுத்தும் போக்கு நடந்து வருவதாக கலங்கி சொல்கிறார்கள் நரிக்குறவர் இன மக்கள்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications