சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ.. இவர்தான் கண்ணதாசன் மகன் அண்ணாதுரையா! தீயாய் பரவும் மீம் மெட்டீரியல் காட்சி.. நடித்தவர் இவர்தான்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் பிரசாந்த் நடித்த படத்தில் மறைந்த நடிகர் விவேக்குடன் காமெடியில் கலக்கினாரே அவர் யாரு தெரியுமா?

சந்திரபாபு, தங்கவேல், நாகேஷ், பாலையா என காமெடியில் கலக்கிய ராஜாக்களுக்கு பிறகு தமிழகத்தின் லாரல் ஹார்டி என புகழ்பெற்றவர்கள் கவுண்டமணி செந்தில்.

இவர்கள் காமெடியில் கலக்கிய நிலையில் அதன்பிறகு விவேக், வடிவேல் ஆகியோர் வந்தனர். இருவரும் காமெடியில் அடித்தட்டு மக்களை கவர்ந்தனர். இருவரது ஜானர்களும் வேறு வேறாக இருந்தன. இதில் விவேக் சமூகம் சார்ந்த கருத்துகளையும் தனது காமெடி மூலம் கொண்டு வந்தார்.

மகளின் திருமண விருந்து.. தலைக்கு இத்தனை ஆயிரமா?.. மொத்த செலவு எவ்வளவு?.. அண்ணாச்சி லெஜண்டின் அசத்தல்மகளின் திருமண விருந்து.. தலைக்கு இத்தனை ஆயிரமா?.. மொத்த செலவு எவ்வளவு?.. அண்ணாச்சி லெஜண்டின் அசத்தல்

வடிவேல்

வடிவேல்

வடிவேல் எப்படி காமெடி என்றால் தனக்கென ஒரு குழுவை வைத்திருந்தாரோ அதே போல் விவேக்கும் செல் முருகன் உள்ளிட்ட சிலரை காமெடி குழுவாக வைத்திருந்தார். தான் ஒப்பந்தமாகும் படங்களில் அவர்களுக்கும் சிறிய வேடமாவது கொடுத்துவிடுவார். மூடநம்பிக்கையை தகர்த்தெறியும் காமெடிகளில் தற்போது மீம் மெட்டீரியலானது என்றால் அது ஜாம்பவான் காமெடிதான்.

பிரசாந்த்

பிரசாந்த்

நடிகர் பிரசாந்த நடித்த ஜாம்பவான் படத்தில் விவேக் மருத்துவராக நடித்திருந்தார். அவருடன் பஞ்சாயத்து தலைவராக ஒருவர் நடித்தார். விவேக் கிளீனிக்கில் இருந்த போது அந்த பஞ்சாயத்துத் தலைவர், தனது ஆட்கள் வருவார். அப்போது விவேக் யார் நீங்கலாம் என கேட்பார். அதற்கு அந்த பஞ்சாயத்து தலைவர் பார்த்தா தெரியலை என்பார். அதற்கு விவேக் பார்த்தா தெரியறதுக்கு நீ என்ன பரங்கிமலையா என கேட்பார்.

பஞ்சாயத்து தலைவர்

பஞ்சாயத்து தலைவர்

அப்போது பஞ்சாயத்து தலைவருடன் இருப்பவர்கள் அண்ணனுக்கு எழுத்து தெரியலை, சாயங்காலத்துக்குள்ள அவர் எல்லா எழுத்துகளையும் படிக்கணும் என்பார்கள். உடனே விவேக் அவர்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு போர்டில் அ என எழுதி தெரியுதா தெரியுதா என சைஸ் வாரியாக கேட்பார். எல்லாத்துக்கும் அந்த பஞ்சாயத்து தலைவர் தெரியவில்லை என்றே சொல்வார்.

விவேக்

விவேக்

உடனே விவேக் பெரிய எழுத்தாக அ என எழுதி போர்ட்டை எடுத்துக் கொண்டு பஞ்சாயத்து தலைவர் அருகே வந்து கேட்பார். அப்போது அவர் தெரியவில்லை என்பார். உடனே விவேக்கிற்கு கோபம் வந்து போர்டை கீழே போட்டுவிடுவார். "நான் தெரியறேனா, இந்த கோட் தெரியுதா, சட்டை தெரியுமாஇந்த வாட்ச் தெரியுதா " என வரிசையாக கேட்கும் போது அந்த பஞ்சாயத்து தலைவர் தெரியுது என்பார்.

விவேக காமெடி

விவேக காமெடி

அதற்கு விவேக் எல்லாம் தெரியுது அந்த போர்டில் இருக்கும் எழுத்து மட்டும் ஏன் தெரியலை என கேட்பார். அதற்கு பஞ்சாயத்து தலைவர் எப்படி தெரியுமா, படிச்சிருந்தாதானே தெரியும், நான் மழைக்கு கூட பள்ளிக் கூடம் பக்கமே ஒதுங்கினது இல்ல என்பார். உடனே விவேக் அதிர்ச்சி அடைந்து ஓ நீ தெரியல தெரியலனு சொன்னது அந்த தெரியலையா?

தமிழில் முதல் எழுத்து

தமிழில் முதல் எழுத்து

தமிழில் முதல் எழுத்தே அ, அதுவே உனக்கு தெரியலை. நீ 18 பட்டிக்கும் தீர்ப்பு வேற சொன்னியா என கேட்பார். ஓ இதுதான் அனாவா என அந்த பஞ்சாயத்து தலைவர் கேட்பார். பின்ன ஓனாவா என கேட்ட விவேக், உன் பிள்ளைகளையாவது படிக்க வச்சியா, உன் பேர பிள்ளைகளையாவது படிக்க வச்சியா என கேட்பார், அதற்கு அவர் இல்லை என்பார்.

யார் அவர்

யார் அவர்

இந்த காமெடி வைரலானது. இதில் விவேக்குடன் நடித்தவர் அண்ணாதுரை கண்ணதாசன். இவர் கவிஞர் கண்ணதாசனுடைய மகன் ஆவார். விவேக் இறந்த போது அந்த துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார். எத்தனையோ பேரைவாழ வைத்தவர் விவேக் என புகழாரம் சூட்டியிருந்தார்.

இன்னொரு காமெடி

இன்னொரு காமெடி

இதுபோல் அண்ணாதுரை விவேக்குடன் நடித்த இன்னொரு படத்தில் வேலை வழங்கும் அதிகாரியாக நடித்திருப்பார். அப்போது அவரிடம் விவேக் இன்டர்வியூவுக்கு வருவார். அப்போது அண்ணாதுரை "ஏம்ப்பா! 5 தடவை கால் லெட்டர் அனுப்பியும் இதுவரை ஏன் வரவில்லை என கேள்வி எழுப்புவார். அதற்கு விவேக், சில பல சமுதாய சிக்கல்களால் என்னால் ஆபீஸுக்கு வர முடியாமல் போய்விட்டது சார். அப்போது அண்ணாதுரை சரி உனக்கு வேலை கிடைத்துவிட்டது என வைத்துக் கொள், ஆபிஸில் முதல் நாளே தீப்பிடித்துவிட்டது, அப்போது என்ன செய்வாய் என கேட்பார். தீயை அணைக்க தண்ணீரை பயன்படுத்துவேன் என விவேக் கூறுவார். அதற்கு அண்ணாதுரை, வாட்டர் டாக்ஸ் கட்டாததால் தண்ணீர் வராது. அப்போது என்ன செய்வாய் என கேட்பார். இப்படியாக விவேக் ஒவ்வொரு ஐடியாவாக சொல்ல சொல்ல அதற்கு அண்ணாதுரை முட்டுக்கட்டையாக சொல்வார். அப்போது விவேக் தனது சான்றிதழ்களை வாங்கி கொண்டு ஏன்யா ஆபிஸ்ல தீப்பிடிச்சா அணைக்கறது தண்ணீர் கிடையாது, மணல் கொட்டுற வாளி உடைஞ்சு போச்சு, வாட்ச்மேனுக்கு பகல்ல காது கேட்காது, இரவில் கண் தெரியாது, இப்படிப்பட்ட ஆபிஸ் இருந்தா என்ன எரிந்தால் என்ன என கூறி தீவைத்து கொளுத்துவிட்டு சென்றுவிடுவார்.

English summary
do you know the person who acts with Actor Vivek in a comedy Jambavan movie? Here is the answer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X