ஏசி + மைக்ரோ வேவ் + அசத்தல் வசதிகள்.. அண்ணாமலை நடைபயணம்.. கேரவன் உள்ளே என்ன இருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் இன்று மாலை தொடங்க உள்ளது. 4 மணிக்கு தொடங்க உள்ள இந்த நடைப்பயணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' இன்று மாலை துவங்க உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்

Do you know what is inside the caravan of BJP Annamalai which will be used for his Yatra?

ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜகவை வலிமைப்படுத்தும் விதமாக அவர் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரத்தில் விழா நடக்க உள்ளது. ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விழா மேடையை பார்வையிட்டார் அண்ணாமலை.

அமித் ஷா இந்த நிகழ்விற்கு வர உள்ள நிலையில் கடைசியில் சென்னையில் பயணம் நிறைவு பெறும் போது அதற்கு பிரதமர் மோடி வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை பயணம் நடைபயணம்தான் என்றாலும் இதற்காக கேரவன் தயாரிக்கப்பட்டு உள்ளது.

கேரவன்: அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் இந்த கேரவன் கதவில் அமைக்கப்பட்டு உள்ளது. பல நவீன வசதிகளுடன் இந்த கேரவன் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் உள்ளேயே சமைத்துக்கொள்ள வேண்டும்.

நவீன கழிப்பறை, குளியலறை என்று பொதுவாக கேரவனில் இருக்கும் வசதிகள் எல்லாம் இதில் உள்ளன. பாரத் ஜோடோ யாத்திரையுலும் ராகுல் காந்தி இதேபோன்ற கேரவனை பயன்படுத்தி இருந்தார். அதில் 200 கேரவன்கள் பயன்படுத்தப்பட்டன. அதிலேயே உணவும் தயாரிக்கப்பட்டது.

Do you know what is inside the caravan of BJP Annamalai which will be used for his Yatra?

அதேபோல் அண்ணாமலை பயணத்திற்கும் இதே கேரவனிலேயே உணவு தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை செய்துள்ள போஸ்டில் , இன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்கவிருக்கும் #EnMannEnMakkal நடைப்பயணத்தில் பங்கு பெறவிருக்கும் என் அன்பு பாஜக சொந்தங்களையும், பிரதமர் நரேந்திர மோடி மக்கள் நலத்திட்டத்தால் பயன் பெற்ற பயனாளிகளையும், பொது மக்களையும் சந்திக்க மிக ஆவலுடன் உள்ளோம்!

ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம்!, என்று கூறி உள்ளார். அண்ணாமலை பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உங்கள் நடைபயணம் மக்கள் நல பயணம். அது நலமாக நடக்க, நிறைவேற என் நல்வாழ்த்துக்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து திட்டங்களும் #SabKaSaathSabKaVikas எனும் அனைத்து மக்களுடன் சேர்ந்து அனைவரின் முன்னேற்றத்திற்காகவும் என்ற அடிப்படை கொள்கையுடையவை, என்று கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+