தாய் பத்திரம்.. ரொம்ப மேஜர் டாக்குமெண்ட்.. மூலப்பத்திரம் தொலைஞ்சிட்டா என்ன செய்யணும்? இதுதான் ரூட்
சென்னை: தாய் பத்திரம் என்றால் என்ன தெரியுமா? இந்த மூலப்பத்திரம் தொலைந்துவிட்டால், அதை உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? சொத்து பத்திரங்கள் தொலைந்துவிட்டால், அதன் நகல்களை எப்படி ஆன்லைனில் பெற வேண்டும் தெரியுமா? ரொம்ப சிம்பிள்.
தமிழகத்தில் பெரும்பாலான துறைகள் ஆன்லைன் மயமாகிவிட்டன.. அதிலும் பொதுமக்களின் வசதிக்காகவே, அரசு துறைகள் ஆன்லைன் மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், நேரம் மிச்சமாகும்.. வீண் அலைச்சல் தேவையில்லை. எந்த துறையிலுமே இடைத்தரகர்களுக்கும் வேலையில்லை.. வேலைகளும் எளிதாக முடிகின்றன.

வீண் அலைச்சல்: உதாரணத்துக்கு, பத்திரப்பதிவு துறையை எடுத்து கொண்டால், ஒரு பத்திரம் தொலைந்து போனால்கூட, அல்லது பழைய சொத்து பத்திரம் நகல் எடுக்க வேண்டுமானால், அவைகளை மீட்டெடுக்க நிறைய அலைச்சல் தேவைப்பட்டது..
தாலுகா அலுவலகத்துக்குதான் நேரில் செல்ல வேண்டும்.. அங்கே அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை திரட்டுவதற்கு இதற்கு பலநாள் அலைந்து திரிய வேண்டும்.. அதற்கு பிறகே, உரிமையாளர்கள் தங்களது சொத்து பத்திர நகலை பெறுவார்கள்.
பத்திரப்பதிவு: ஆனால், இப்போது அப்படியில்லை.. தொலைந்த பத்திரத்தையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.. அதுவும் பத்திர ஆபிஸ் போகாமலேயே, வீட்டுக்குள்ளிருந்தே தொலைந்து போன பத்திரத்தின் நகலை பெற முடியும். ஆனால், தாய் பத்திரம் பத்திரம் தொலைந்து போய்விட்டால் இதற்கு சில வழிமுறைகள் உள்ளன..
தாய்ப்பத்திரத்தை, மூலப்பத்திரம் அதாவது parent document என்று சொல்வார்கள்.. இது மிகவும் முக்கியமான ஆவணம்.. முதல் முதலாக குறிப்பிட்ட சொத்தை வாங்கியவர், அதை யாரிடமிருந்து வாங்கினார், என்பதே தாய்ப்பத்திரம்..
வழிமுறைகள்: சுமார் 100 வருடங்களுக்குமுன்பு, யார் அந்த சொத்தின் ஓனர்? அவருக்கு இந்த சொத்து எப்படி? எந்த பத்திரம் அல்லது அரசு ஆவணம் என்பதெல்லாம் அடங்கியது. 100 அல்லது 200 வருடங்களுக்கு முந்தைய பத்திரங்கள் என்பதால், இந்த பத்திரங்கள் நிச்சயம் காணாமல் போக நிறைய வாய்ப்புகள் உண்டு.. தாய் பத்திரம் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
- தாய் பத்திரம் எந்த ஊரில் தொலைந்ததோ, அந்த ஊரிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் உடனே பத்திர விவரத்தை குறிப்பிட்டு, "காணவில்லை" என்று புகார் தர வேண்டும்.
- காவல் அதிகாரியின் கையொப்பம், காவல் நிலைய முத்திரையுடன், புகாரை பெற்றுக்கொண்ட ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும்..
- 2, 3 நாட்கள் தேடிப்பார்த்தும் பத்திரம் கிடைக்காமல் போனால், காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்படும். இந்த எப்ஐஆர் அறிக்கையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- காணாமல் போன ஆவணத்தை யாராவது கண்டெடுத்து ஒப்படைக்கிறார்களா? என்பதை காவல்துறை ஆராயும். மற்றொருபக்கம் காணாமல் போன ஆவணம் குறித்த விசாரணையையும் மேற்கொள்ளும்.
- தாய் பத்திரம் கிடைக்காவிட்டால், "கண்டுபிடிக்க முடியவில்லை" (Non Tracable) என்று சான்றிதழை காவல் நிலையத்தில் தருவார்கள்
- இந்த சான்றிதழுடன், நீங்கள் வழக்கறிஞரை அணுக வேண்டும். "பத்திரத்தை காணவில்லை, கண்டெடுப்போர் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும்" என்று தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும், 2 பிரபலமான பத்திரிகைகளில் அவர் விளம்பரம் செய்வார்.
- 15 நாட்களுக்குள் ஆவணங்கள் கிடைத்தால் அதை வழக்கறிஞர் உங்களிடம் ஒப்படைப்பார். ஆவணம் கிடைக்காவிட்டால், ஆவணத்தின் நகலை (Certified copy) சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்று, விளம்பரம் செய்த பத்திரிகையுடன் இணைக்கப்பட்ட சான்றிதழை வழக்கறிஞர் தருவார்.. அதை நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட சொத்தினை பிரச்சனையில்லாமல் அனுபவிக்கலாம்.
இதெல்லாம் அடிப்படையான ஒருசில வழிமுறைகள் என்றாலும், உங்கள் வழக்கறிஞர் அல்லது காவல்துறையினரிடம் அணுகினால், இதுகுறித்து விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
வழிமுறைகள்: மொத்தத்தில், நோட்டரி உறுதி மொழி பத்திரம், பத்திரிகை விளம்பரம் நகல், போலீஸ் ஸ்டேஷன் புகார் மனு, எப்ஐஆர், NOT TRACABLE சான்றிதழ் இப்படி 6 ஆவணங்களும் கையில் இருந்தால்தான், நீங்கள் பெற்றிருக்கும் "நகல் பத்திரம்", தொலைந்துபோன ஒரிஜினல் ஆவணங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications