Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிக்ஸர்" எடப்பாடி.. "ஏங்க, நீங்க வேற".. டிடிவி தினகரன் பற்றி கேட்டதுமே.. எடப்பாடி சொன்ன அந்த 1 சொல்

டிடிவி தினகரன் குறித்து கேள்வி கேட்டதுமே எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் என்ன தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆர் கையிலிருந்த இரட்டை இலை நம்பியார் கையில் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ள கருத்தும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பதிலும் மிகுந்த கவனத்தை திருப்பி வருகின்றன.

பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருக்கும் நிலையில், அந்த பொதுக்குழுவின் போது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கமும் உறுதியாகி இருக்கிறது.

சுப்ரீம்கோர்ட் உத்தரவையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்

பலவீனம்

பலவீனம்

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், " இந்த தீர்ப்பிற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தென்னை மரத்திற்குத் தேள் கொட்டினால்.. அது பனைமரத்திற்கு எந்தவொரு பாதிப்பையும் தராது... இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்பட்டாலும் அது பலவீனமாகதான் இருக்கும்... இனி அதிமுக இன்னும் பலவீனம் அடையும். வருங்காலத்தில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஆதரவோடுதான் இரட்டை இலை ஜெயிக்க முடியும். இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றி தான். இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வென்றுவிடுவார்களா?

 போன ரவுண்டு ஓபிஎஸ்

போன ரவுண்டு ஓபிஎஸ்

ஓபிஎஸ் எனது பழைய நண்பர். 3 முறை முதல்வராக இருந்தவர். இப்போது ஒரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராகப் போராடி கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு தீர்ப்பு அவருக்கு எதிராக வந்துவிட்டதால்.. அவர் என்னுடன் சேர வேண்டும் என்று கூறும் அளவுக்கான ஆள் நானில்லை" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.. அதாவது போன ரவுண்டில் ஓபிஎஸ், இந்த ரவுண்டில் எடப்பாடி என்று கிண்டலாக தெரிவித்துள்ளார் டிடிவி.

 அத்தைக்கு மீசை

அத்தைக்கு மீசை

அதிமுக ஒன்றிணைந்தால் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்று ஒருமுறை தினகரனிடமே செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அதன் பிறகு பார்ப்போம் என்று கூறியிருந்த நிலையில்தான், இன்று இத்தனை விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை, டிடிவி தினகரன் விமர்சித்து பேட்டி தருவது வழக்கம்தான் என்றாலும் இன்றைய பேட்டியில் சற்று காரம் கூடியுள்ளதாகவே தெரிகிறது.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன..

 கிட்ட கிட்ட நெருங்கி

கிட்ட கிட்ட நெருங்கி

அதிமுகவுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகவே பல்வேறு முயற்சிகளை இத்தனை வருடமும் மறைமுகமாகவே எடுத்து வந்துள்ளார் தினகரன்.. ஆனால், எடப்பாடியின் விடாப்பிடியான பிடிவாதம் காரணமாக, அதிமுகவுக்குள் தினகரனால் நெருங்க முடியாத நிலைமைதான் ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, கட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். அப்போதுகூட, வலிய வந்து அந்த கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்திருந்தார் தினகரன்.. ஆனால், இதையும் எடப்பாடி கண்டுகொள்ளவேயில்லை.

 2 வருஷ கணக்கு

2 வருஷ கணக்கு

இந்த சூழலில்தான், இடைத்தேர்தல் தேதி திடீரென அறிவிக்கப்பட்டது.. அதிமுகவை ஒன்றிணைத்து இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்று பாஜக எடுத்த முயற்சியை அதிகமாகவே எதிர்பார்த்தது டிடிவி தினகரன்தான்.. ஆனால், பாஜகவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.. இரட்டை இலை சின்னத்துக்கு எப்படியும் கோர்ட்டில் சிக்கல் வரும், அதை முன்னிறுத்தி 2 அணிகளும் இணையும்.. 2 அணிகள் இணைந்துவிட்டால், தனக்கும் ரூட் கிளியராகி விடும் என்றெல்லாம் கணக்கு போட்டிருந்த நிலையில், அந்த விஷயத்திலும் தினகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 ரூட் தனியே

ரூட் தனியே

ஒருவேளை எடப்பாடி, ஓபிஎஸ், என தனித்தனியே போட்டியிட்டாலும், அதிமுக வாக்குகள் சிதறி, அமமுகவுக்கு சாதகமாகும் என்றே கணித்திருந்த நிலையில், இலையும் எடப்பாடி பக்கம் போய்விட்டது.. இந்த விஷயத்திலும் தினகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. போதாக்குறைக்கு ஓபிஎஸ்ஸும் வேட்புமனுவை வாபஸ் வாங்க, தினகரன் கையை பிசைந்து நிற்க, வேறு வழியில்லாமல், தேர்தலில் இருந்து அமமுக பின்வாங்க நேரிட்டுவிட்டது. அதேபோல, இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து தினகரன் காத்திருந்தபோது, அதிலும் அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது..

 பாஜக ஷாக்

பாஜக ஷாக்

குக்கர் சின்னம் கிடைக்காததால்தான், போட்டியிடவில்லை என்று தினகரன் காரணம் சொன்னாலும், அவரது நிஜஅதிருப்திகள் பாஜக மீதும் குவிந்து வருவதை மறுக்க முடியாது.. எடப்பாடி பழனிசாமி மீதான ஆதரவு வலையை, இப்போது பாஜக அதிக வீர்யத்துடன் துவங்கிவிட்டதும் தினகரனுக்கு கொஞ்சம் ஷாக்தான் என்கிறார்கள்.. எப்படியும் பாஜகவை எடப்பாடி கழட்டிவிட்டுவிடுவார் என்று நம்பிக் கொண்டிருந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று சொல்லி டெல்லி பக்கம் ஐக்கியமாகிவிட்டது அதைவிட அதிர்ச்சியை தந்துவிட்டதாம்.. இவ்வளவும் சேர்ந்துதான், இன்றைய தினம் எடப்பாடி குறித்த தன்னுடைய கருத்துக்களை தினகரன் வெளிப்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது.

 நடிகர் வீரப்பன்

நடிகர் வீரப்பன்

ஆனால், வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முடிவில் தெளிவாகவே இருக்கிறார்.. இன்னும் உறுதிப்பாடும் கூடியுள்ளது.. இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, எந்த கொம்பனாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று எடப்பாடி குறிப்பிட்டிருந்தது, ஓபிஎஸ்ஸுடன் சேர்த்து தினகரனையும்தான் என்கிறார்கள்.. அப்போது செய்தியாளர்கள், "எம்ஜிஆர் கையில் இருந்த இரட்டை இலை சின்னம் இப்போது பிஎஸ் வீரப்பா கையில், எம்என் நம்பியார் கையில் உள்ளதாக சொல்கிறாரே, இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினர்.

கருத்து

கருத்து

அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஏங்க அவரை ஒரு ஆளாகவே பொருட்படுத்தவில்லை அப்புறம் ஏன் பேசிக்கிட்டு" என்று சட்டென ஒற்றை வரியில் தினகரன் கேள்வியை அவாய்ட் செய்தார்.. அந்த கேள்விக்கு எடப்பாடி பதிலே சொல்லவில்லை என்றாலும், தினகரனை கடந்து செல்வதே தன்னுடைய பதிலாக உணர்த்தியதை கவனிக்க முடிந்தது.. நேரடியாகவும், வலிமையாகவும், பலமாகவும் மோதுவதைவிட சிறந்த பதிலடி புறக்கணிப்பு என்பதையும் எடப்பாடி பழனிசாமி இன்றைய உணர்த்தி இருப்பதாகவே தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+