ரம்ஜான் வரப்போகுது.. சென்னையில் எங்கெல்லாம் இப்தார் சாப்பிடலாம் தெரியுமா? இந்த ரீல்ஸை பாருங்க
சென்னை: ரம்ஜான் வர உள்ள நிலையில் சென்னையில் இன்னும் 2-3 நாட்களுக்குத்தான் இப்தார் உணவுகளை உண்ண முடியும். இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் எங்கெல்லாம் இப்தார் சாப்பிட முடியும் என்று ஒரு சின்ன ரவுண்ட் அப் பார்க்கலாமா!

ரம்ஜான் மாதம் முடியப்போகிறது.. ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த மாதம் முழுக்க இஸ்லாமியர்கள் நோன்பிற்கு பிறகு நோன்பு துறக்க பல வகையான உணவுகளை உண்பார்கள். இப்தார் என்பது நோன்பிற்கு பின் உண்ணத் தொடங்கும் நேரம் ஆகும். இந்த இப்தாருக்கான உணவுகள் ஒவ்வொரு வருடமும் டிரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் சென்னையில் பல விதமான இப்தார் உணவுகள் டிரெண்டாகின.

ரம்ஜான் வர உள்ள நிலையில்.. இன்னும் 2-3 நாட்களுக்குத்தான் இப்தார் உணவுகளை உண்ண முடியும். சென்னையின் பல பகுதிகளில், குறிப்பாக மன்னடி, பட்டினப்பாக்கம், வடபழனி, ராயப்பேட்டை, பெரியமேடு, மற்றும் தேனாம்பேட்டையில், ரம்ஜான் காலத்தில் சிறப்பு இப்தார் உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கியமாக நோன்பு கஞ்சி, மட்டன் கீமா, சிக்கன் ஹாங்கமா, மட்டன் மஸா, ப்ரான் உணவுகள், சமோசா, குஸ்கா, கேப்ஸ் மற்றும் ஷவர்மா, முட்டை பொரியல், மற்றும் மட்டன் சிக்கன் கிரில் ஆகியவை சென்னையில் இப்தார் சாலை உணவுகளாக விற்கப்படுகின்றன.
மேலும், இனிப்பு வகைகளில் சூடான ஜிலேபி, பாசந்தி, பாதாம் பால், பாலில் செய்யப்பட்ட பல வகையான உணவுகள் மற்றும் இளநீர் பாயாசம் ஆகியவை விற்கப்படுகின்றன.
சென்னையில் இருக்கும் முஸ்லிம் ஹோட்டல்களில் மட்டுமல்லாது, தெருவோர கடைகளிலும், சிறப்பான இப்தார் உணவுகள் கிடைக்கும். இந்த ரம்ஜான் மாதத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய சிறப்பான, நல்ல இப்தார் உணவுகள் எங்கே கிடைக்கும்.. எப்படி வாங்குவது.. என்பதை இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications