ட்விஸ்ட்.. எடப்பாடி மகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. காங்கிரஸுடன் "மிதுன்"?.. பகீர் மருது அழகுராஜ்
எடப்பாடி பழனிசாமி குறித்து மருது அழகுராஜ் சரமாரியாக விமர்சித்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு கிடைக்ககூடிய வெற்றியை காங்கிரசுடன் சேர்ந்து உடைத்துவருகிறார் என்றும், பாஜகவுக்கே துரோகம் செய்ய துணிந்துவிட்டதாகவும், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் விரும்புவதால், அதற்கான அறிவுரைகளைகளும் சிக்னல்களும் தொடர்ந்து எடப்பாடிக்கு தரப்பட்டு வந்தது..
மறைமுக அழுத்தங்களும், சிக்னல்களும் தரப்பட்ட நிலையில், அதை கடைசிவரை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டார்.

அழகுராஜ்
நெடுஞ்சாலை துறை ஊழல், சம்பந்தி ஊழல் விவகாரம், கொடநாடு விவகாரம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, என பல்வேறு விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டு வரும்நிலையில், பாஜக எதிர்ப்பு அரசியலையும் அவர் கையில் எடுத்துள்ளதாக சலசலக்கப்படுகிறது.. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், நம்மிடம் பல விஷயங்களை மருது அழகுராஜ் பகிர்ந்து கொண்டார். அதன் சுருக்கம்தான் இவை:

அறுவடை
"2019 ல் அதிமுக என்ற கூட்டணி, பாஜகவுக்கு கொடுத்த பரிசு என்ன? ஒன்றுமேயில்லை.. பூஜ்யம்ததான்.. அன்று, பிரிந்து சென்ற ஓபிஎஸ்ஸை அதிமுகவுடன் இணைத்துவைத்து, அதிமுகவை ஒன்றுபடுத்திவிட்டு, திகாருக்கு தினகரனையும், பெங்களூருக்கு சசிகலாவையும் அனுப்பி வைத்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்வதற்கான இணக்கமான சூழலையும் இங்கே உருவாக்கி தந்தது பாஜதானே.. அந்த பாஜகவால், அறுவடையை பெற்றுவிட்ட எடப்பாடி, 2019ல் பாஜகவுக்கு பிரதி உபகாரமாக எதையுமே செய்யவில்லை.. அப்போது தன் ஆட்சிக்கு தேவையான அறுதிப்பெரும்பான்மையையும், இடைத்தேர்தலில் அப்போது பெற்றுக் கொண்டார்..

பூஜ்ஜியம்
ஆனால், 2019 எம்பி தேர்தலில் எடப்பாடி தன் உழைப்பே காட்டவில்லை.. பணமும் செலவு செய்யவில்லை.. பிரச்சாரமும் ஒழுங்காக செய்யவில்லை.. அதனால்தான் திமுக அமோகமாக வெற்றி பெற்று, பாஜக பூஜ்யத்தை பெற்றது.. இப்போது மீண்டும் எம்பி தேர்தல் வரப்போகிறது.. நம்மை ஆட்சி செய்ய பல வழிகளில் உதவிய பாஜகவுக்கு, கூட்டணி என்ற அடிப்படையிலாவது, ஏதாவது உதலாம் அல்லவா? திமுகவால் காங்கிரசுக்கும் எப்போதுமே பலன் உண்டு.. அதேபோல எம்பி தேர்தலின்போது திமுகவுக்கு காங்கிரசும் உதவுகிறது.. எப்போதுமே தனக்கு உதவுபவர்களுக்கு திமுக சரியாகவே திருப்பி செய்கிறது..

மிதுன் + சுனில்
ஆனால், எடப்பாடி பாஜகவுக்கு என்ன செய்தார்? பாஜக இந்த முறை அதிக அளவு தமிழகத்தை நம்பும்போது, கட்சியை உடைத்துவிட்டார்.. எடப்பாடிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தருபவர் சுனில் என்பவர்தான்.. அந்த சுனில்தான், அகில இந்திய காங்கிரசில் ஒரு பிரதான பிரமுகர் ஆகிவிட்டார்.. அந்த சுனிலும், எடப்பாடி மகன் மிதுனும் நெருங்கிய மகன்கள்.. காங்கிரஸ் கட்சி தென்மாநிலங்களில், பாஜகவுக்கு வெற்றி கிடைத்துவிடக்கூடாது என்று நினைக்கிறது.. வடமாநிலங்களில் விழுந்துள்ள சரிவை தென்மாநிலங்களில் பெற பாஜக முனைக்கிறது.. இந்த வெற்றியை தடுக்க காங்கிரஸ் தடுக்க நினைக்கிறது.

சசிகலா
அங்குள்ள சுனிலும், இங்குள்ள மிதுனும் நட்பாக இருக்கக்கூடிய சூழலில், பாஜகவுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை தடுப்பதற்காக, தன் வெற்றியை தானே உடைத்துக் கொள்கிறார் எடபப்டி பழனிசாமி.. பாஜகவுக்கு கிடைக்க கூடிய வெற்றியை தடுப்பது பாஜக இல்லை.. ஓபிஎஸ்ஸும் அதை தடுக்கவில்லை.. .திகாருக்கு அனுப்பப்பட்ட தினகரனே, பாஜகவுடன் கூட்டணி என்று வந்துவிட்டார்.. பெங்களூர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட சசிகலாவே, பாஜகவை எதிர்த்து பேசவில்லை.. ஆனால், நாலரை வருடங்கள் பாஜகவால் அறுவடை செய்து பலன்பெற்ற எடப்பாடி, பாஜகவுக்கு துரோகம் செய்ய துணிந்துவிட்டார்" என்றார்.
-
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications