விஜயின் அரசியல் குரு இனிமேல் இவர் தானா? கழட்டி விடப்படும் தவெக நிர்வாகிகள்? பிரபலம் சொல்வதென்ன
சென்னை: அதிமுகவுக்கு இருப்பது தொண்டர்கள் கூட்டம்.. ஆனால் விஜய்க்கு இருப்பது ரசிகர்கள் கூட்டம்.. அதனால்தான், விஜய்யை யாராவது தவறாக பேசினால் உடனே திட்டிவிடுகிறார்கள்.. நீதிபதியாக இருந்தாலும் தவறாக பேசுகிறார்கள்.. யாரையும் விட்டுவைப்பதில்லை.. சிலர் முட்டாள்தனமாக பேசிவிடுகிறார்கள் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Aram Naadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, சில நெருக்கடிகள் காரணமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துவிட்டது. இதனை தவெக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. விஜய்யுடன் சேர்ந்தால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பதால், பாஜகவுடன் எப்படி கூட்டணி? என்று எடப்பாடியும் சந்தேகத்திலேயே உள்ளார்

புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் போன்றோர் தலைமறைவாக உள்ளனர்.. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் மீது விஜய்யின் அப்பா சந்திரசேகர் பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.. இப்போதுள்ள நெருக்கடி சூழ்நிலையில், மகனிடம் அப்பா பேசியிருக்கிறார்.. சந்திரசேகர் நிறைய அரசியம் அனுபவம் வாய்ந்தவர்..80 வயதை கடந்தவரும்கூட.. எனவே நிச்சயம் மகனுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பார்.. சந்திரசேகரின் ஆலோசனைகள் இனிமேல் தவெகவில் இருக்கும் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன..
தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று அன்று அண்ணாமலை பகிரங்கமாகவே விமர்சனம் செய்தார்.. இன்று அண்ணன் எடப்பாடி என்று அண்ணாமலை பேச ஆரம்பித்துவிட்டார்.. எனவே அரசியல் என்பது சாதாரணமாகிவிட்டது..
வீறுகொண்ட சிங்கம்
ஆனால், விஜய்க்கு மட்டும் அசாதாரணமானது.. காரணம், திமுகவை விமர்சித்துவிட்டு, அதிமுகவையும் விமர்சித்துவிட்டு, பாஜகவையும் விமர்சித்துவிட்டு, தான் ஒரு வீறுகொண்ட சிங்கம் என்றெல்லாம் பல மேடைகளில் விஜய் பேசிவிட்டார்.. இப்போது அதிமுக-பாஜக கூட்டணிக்குள் தவெக வருவது என்பது, விஜய்க்கு இறங்குமுகம்தான்..
இதற்கு சரியான உதாரணம் விஜயகாந்த்தான்.. அன்று அவர் அரசியலுக்கு வந்தபோது தனித்தே நிற்பேன் என்றார்.. விஜயகாந்த் அப்படி சொன்னதுதான், மக்களிடம் மிகப்பெரிய அன்று செல்வாக்கை பெற்று தந்தது..ஆனால், அதற்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி என்று கூட்டணி அரசியலுக்குள் போனார்.. இதனால் விஜயகாந்த்துக்கு என்றிருந்த தனிப்பட்ட செல்வாக்கு இறங்கிவிட்டது.. அதுபோன்ற நிலைமைகூட விஜய்க்கு நாளை வரலாம்..
விஜய்க்கு பக்குவம் இல்லை என்பதால், கரூர் சம்பவத்துக்கு பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளார்.. ஏதாவது ஒன்றை செய்தாக வேண்டிய நிலைமையில் உள்ளார்.. இதனால் யாரிடம் அடைக்கலம் செல்வது? என்ற யோசனையில் உள்ளார்..ஆனால் எந்த கூட்டணிக்கும் செல்லாமல் விஜய் தனித்து நிற்பாரானால், அது அவரது செல்வாக்கை மேலும் கூட்டும் என்பது தான் உண்மை.
வெறித்தனமான ரசிகர்கள்
அதிமுகவுக்கு இருப்பது தொண்டர்கள் கூட்டம்.. ஆனால் விஜய்க்கு இருப்பது ரசிகர்கள் கூட்டம்.. அதனால்தான், விஜய்யை யாராவது தவறாக பேசினால் உடனே திட்டிவிடுகிறார்கள்.. நீதிபதியாக இருந்தாலும் தவறாக பேசுகிறார்கள்.. யாரையும் விட்டுவைப்பதில்லை.. சிலசமயம் முட்டாள்தனமாக பேசிவிடுகிறார்கள்.. இப்படி வெறித்தனமாக உள்ள ரசிகர்கள், விஜய்க்கு தொண்டர்களாக மாற மறுக்கிறார்கள்.
ஆனால், அதிமுகவில் அப்படியில்லை.. கட்டுக்கோப்பான தொண்டர்களாக அவர்கள் உள்ளனர்.. எனவே அதிமுக-தவெக இரண்டும் கூட்டணி வைத்து பயணித்தால், விஜய்க்கும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையாகவே இருக்கும்.. எடப்பாடிக்கம் நெருக்கடியான சூழ்நிலையாகவே இருக்கும்..
நல்ல கூட்டணி? ஆபத்தான கூட்டணி?
ஏதாவது ஒரு சூழலில் எடப்பாடி பழனிசாமி விஜய்யை தவறாக லைட்டா பேசிவிட்டால்கூட, ரசிகர்கள் கொந்தளித்துவிடுவார்கள்..எனவே அதிமுக-தவெக கூட்டணி அமைந்தால் அதனை நல்ல கூட்டணி என்பதா? ஆபத்தான கூட்டணி என்பதா? தெரியவில்லை.. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே!











Click it and Unblock the Notifications