"பஸ்பம்" ஆகிடுவாங்க.. அடுத்த "முதல்வர்" எடப்பாடி.. உதவி செய்ய போவதே திமுகதான்.. சொல்றது யார் பாருங்க

அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி நிச்சயம் பொறுப்பேற்பார் என்கிறார் விபிபி பரமசிவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: . எப்படியும் எம்பி தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.. மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார்.. என்று அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விரைவில் எம்பி தேர்தல் உள்ள நிலையில், அதற்கு தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்தவகையில், திமுக அரசு மீது தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன.

அதிலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியபடியே உள்ளார்.. ஒருபக்கம் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை கையில் எடுத்துக்கொண்டே மறுபுறம் திமுகவை சாடி வருகிறார்..

 Dr VPP பரமசிவம்

Dr VPP பரமசிவம்

"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக மக்களின் அவப்பெயரை சம்பாதித்துள்ளது, மக்கள், திமுக மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள், அதை திசை திருப்புவதற்கான முயற்சியாக இந்தி எதிர்ப்பை திமுக கையில் எடுத்திருக்கிறது" என்றெல்லாம் அண்ணாமலை கூறிவருகிறார்.. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தீவிரமான ஆதரவாளரும், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், திமுக அரசை சரமாரியாக விமர்சித்துள்ளார்.. நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட முக்கிய கருத்துக்கள் இவைதான்:

 75 சீட்கள்

75 சீட்கள்

எடப்பாடி பழனிசாமி நாலரை வருட கால நல்லாட்சியை தந்ததுடன், மக்களிடமும் நல்ல பெயரை பெற்றதாலே, கூட்டணிகளுடன் சேர்ந்து 75 சீட்களை பெற்று, மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.. எதிர்க்கட்சி என்றாலும், அதை மக்கள் அங்கீரிக்க வேண்டும்.. மீடியாக்களை விலைக்கு வாங்கி கொண்டு, ஏதோ மாயையை திமுக நிகழ்த்தி கொண்டிருக்கிறது.. ஆனால், அதிமுக, முறையான ஆர்ப்பாட்டங்கள், கண்டன அறிக்கைகள், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை எழுப்பி, நிதானமாக திமுக எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது..

 1000 ரூபாய்

1000 ரூபாய்

திமுக அரசு தங்கள் கையாலாகத்தனத்தை மறைப்பதற்காக உச்சபட்ச பொய்யை கூட சொல்வார்கள்.. 1000 ரூபாய் எங்கே? என்று திமுகவை கேட்டுப்பாருங்களேன், உடனே தமிழை, கையில் எடுத்துக்கொள்வார்கள்.. லேப்டாப்பை நிறுத்திட்டீங்களே ஏன்? என்று கேட்டுப்பாருங்களேன், உடனே இந்தியை, கையில் எடுத்துக்கொள்வார்கள்.. கோவையில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட இத்தனை அச்சுறுத்தல்கள் மக்களுக்கு இருக்கே? என்று கேட்டுப்பாருங்களேன், உடனே நீ உண்மையான திராவிடனா? என்று கேள்வி கேட்பார்கள்.. அப்படியும் இல்லையென்று சொன்னால், சாதி, மதத்தை கையில் எடுத்துக்கொண்டு, பிரித்தாளும் சூழ்ச்சியைகூட செய்ய தயங்க மாட்டார்கள்...

 டி ஷர்ட்ஸ்

டி ஷர்ட்ஸ்

இவங்க அப்பா காலத்தில் இருந்தே இப்படித்தான்.. தங்கள் தவறுகளை மறைக்க எதை வேண்டுமானாலும் செய்வதில் வல்லவர்கள்.. தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்சனை நடக்கிறது என்றால், உடனே பக்கத்தில் இருக்கிற ஒரு அமைச்சரை விட்டு ஏதாவது பேச சொல்லிடுவார்.. உடனே அந்த அமைச்சர் பேசிய டாபிக் ஓடிக் கொண்டிருக்கும்.. அப்படித்தான் ஆ.ராசா பேசிய பேச்சு ஓடியது.. அன்று, "இந்தி தெரியாது போடா" என்று டி-ஷர்ட் போட்டாங்களே, இந்த முறை இந்தி திணிப்பு போராட்டத்துக்கு பொதுவானர்களோ, நடிகர்களோ, யாராவது ஆதரவு தெரிவித்தார்களா? அந்த டி-ஷர்ட்டை யாராவது இப்போ போட்டாங்களா? யாருமே போடல.. ஏன் என்றால் அது முழுமையான நாடகம் என்று எல்லாருக்குமே தெரியும்.

 மனசாட்சி

மனசாட்சி

அடிப்படை மருந்துகள் இல்லாமல் பல்வேறு மருத்துவமனையில் தட்டுப்பாடுகள் இருக்கிறது.. அதிமுக காலத்தில் இப்படி ஒரு பிரச்சனையே எழுந்தது இல்லையே.. லஞ்ச லாவண்யம் என்பது மருத்துவ துறையில்தான் அவ்வளவாக இல்லாமல் இருந்தது.. திமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த மருத்துவ துறையிலும் வந்துவிட்டது.. நம்மை காக்கும் 48 திட்டம் அறிவித்தார்களே? எப்படித்தான் மனசாட்சியே இல்லாமல் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்தார்களோ? யார்கிட்டயாவது போயி, இந்த திட்டத்தை பற்றி கேட்டுப்பாருங்களேன், தெரியாது என்றே சொல்வார்கள்..

 ரியல் கணக்கு

ரியல் கணக்கு

ஏனென்றால், விளம்பர நோக்கத்திற்காக இதை ஆரம்பித்தார்கள்.. திட்டம் என்னவோ நல்ல திட்டம்தான்.. ஆனால் பலனடைந்தவர்கள் எத்தனை பேர்? இவர்கள் இதுவரை எத்தனை சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்கள்? ஆளுக்கு ஒரு கணக்கு சொல்றாங்க.. வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றால், முக்கியமான வாக்குறுதியைதான் நிறைவேற்ற வேண்டும்... அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தந்திருந்தால், இந்நேரம் உங்களை யாராவது கேள்வி கேட்பார்களா? அரசு ஊழியர்கள் எரிமலையாய் கொதித்து கொண்டிருக்கிறார்கள்..

 ஹெல்ப் திமுக

ஹெல்ப் திமுக

தேர்தல் நேரத்தில் அந்த எரிமலை வெடிக்கும்போது, திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருக்கிற ஆட்சி பஸ்பமாகிவிடும்.. அரசு ஊழியர்களை அந்த அளவுக்கு வஞ்சித்து கொண்டிருக்கிறது இந்த அரசு.. எப்படியும் எம்பி தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.. மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார்.. எங்களது வெற்றிக்கு துணையாக இருக்க போவது திமுகவின் இந்த விடியாத ஆட்சிதான்.. இந்த ஆட்சியின் அவலத்தை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.. திமுகவும் எங்களது வெற்றிக்காக உழைக்க போறாங்க.." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+